சித்தமா யுள்பொருளைத்
தேர்ந்திருத்தல் சித்திபிற
சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே - நித்திரைவிட்
டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை
நின்றுபொய்ம்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்.
சித்தமாய்உள் பொருளைத்தேர்ந்து
இருத்தல் சித்திபிற
சித்திஎலாம் சொப்பனம்ஆர் சித்திகளே - நித்திரைவிட்டு
ஓர்ந்தால் அவைமெய்யோ
உண்மைநிலைநின்று பொய்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்.
எப்போதும் ஸ்வபாவமாக இருக்கிற
பொருளை அறிந்து அம்மயமாக இருப்பதே சிறந்த சித்தியாகும். பிற சித்திகள் எல்லாம்
கனவில் இருக்கும் சித்திகள் போலவே. தூக்கம் கலைந்து
எழுந்தபின் சிந்தித்துப்பாத்தால் அவை உண்மையாக இருப்பதில்லையே! தம் உண்மை நிலையில் அமர்ந்து அஞ்ஞான தூக்கத்தை
ஒழித்தவர் மயக்கமுற்று அந்த சித்திகளை அடைய விரும்புவார்களோ? விரும்பார் என அறி.
सिद्धस्य वित्तिः सत एव सिद्धिः स्वप्नोपमानाः खलु सिद्धयोऽन्याः ।
स्वप्नः प्रबुद्धस्य कथं नु सत्यः सति स्थितः किं पुनरेति मायाम् ॥ ३७ ॥
ஸித்³த⁴ஸ்ய வித்தி: ஸத ஏவ ஸித்³தி⁴: ஸ்வப்னோபமானா: க²லு ஸித்³த⁴யோ(அ)ந்யா: |
ஸ்வப்ன: ப்ரபு³த்³த⁴ஸ்ய
கத²ம்ʼ நு ஸத்ய: ஸதி ஸ்தி²த: கிம்ʼ புனரேதி மாயாம் || 37 ||
No comments:
Post a Comment