என்று மெவர்க்கு
மியல்பா யுளபொருளை
யொன்று முளத்து
ளுணர்ந்துநிலை -நின்றிடா
துண்டின்
றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே
சண்டையிடன்
மாயைச் சழக்கு.
என்றும்
எவர்க்கும் இயல்பாய் உளபொருளை
ஒன்றும் உளத்துள்
உணர்ந்து நிலை -நின்றிடாது
உண்டுஇன்று
உருஅருஎன்று ஒன்று இரண்டு அன்று என்றே
சண்டை இடல்
மாயைச் சழக்கு.
எல்லோருக்கும்
என்றும் இயல்பாக இருக்கிற பொருளை மனம் ஒன்றுகிற இதயத்தில் அறிந்து அங்கேயே நிலையாக
நின்றிடாமல் அவ்விதப்பொருள் இருக்கிறது என்றும்; இல்லை என்றும்; அது ஒன்று
என்றும்; இல்லை இரண்டு
என்றும்; ஒன்றுமில்லை, இரண்டுமில்லை
என்றும் சண்டை போடுவது மயக்கத்தை அதிகமாக்குகிற மடமையே ஆகும்.
हृत्प्राप्य सद्धाम निजस्वरूपे स्वभावसिद्धेऽनुपलभ्य निष्ठाम् ।
मायाविलासः सदसत्सरूप-विरूपनानैकमुखप्रवादाः ॥ ३६ ॥
ஹ்ருʼத்ப்ராப்ய
ஸத்³தா⁴ம நிஜஸ்வரூபே ஸ்வபா⁴வஸித்³தே⁴(அ)நுபலப்⁴ய நிஷ்டா²ம் |
மாயாவிலாஸ: ஸத³ஸத்ஸரூப- விரூபனானைகமுக²ப்ரவாதா³: || 36 ||
No comments:
Post a Comment