Pages

Monday, March 9, 2015

உள்ளது நாற்பது - 6


  உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்

றுலகுசுக மன்றென் றுரைத்தெ – னுலகுவிட்டுத்

தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற

வந்நிலையெல் லார்க்குமொப் பாம்.
 
உலகு மெய் பொய்த் தோற்றம் உலகுஅறிவாம் அன்றுஎன்று
உலகுசுகம் அன்றுஎன்று உரைத்துஎன் – உலகு விட்டுத்
தன்னைஓர்ந்து ஒன்றுஇரண்டு தான் அற்று நான்அற்ற
அந்நிலை எல்லார்க்கும் ஒப்பாம்.
பலரும் வாதத்தில் ஈடு படுகின்றனர். உலகம் மெய் என ஒரு சாராரும்; இல்லை அது பொய் என ஒரு சாராரும் வாதிடுகின்றனர். அது போலவே உலகம் சித் என்றும், இல்லை ஜடம் என்றும்; உலகம் சுகமானது என்றும், இல்லை துன்பமயமானது என்றும் வாதிடுகின்றனர். இதனால் பெறும் பயன் ஏதும் இல்லை. உலகத்தை கவனிப்பதை விட்டுவிட்டு தன்னை யார் என்று விசாரித்தலே நன்று. தான் இருக்கிறோம் என்பது எல்லாருக்குமே சொந்த அனுபவமாக இருக்கிறது. அதில் யாருக்கும் சந்தேகம் இருப்பதில்லை. இந்த தான் யார் என்று விசாரித்து அறிவதே ஆன்ம ஸ்வரூபத்தை உணர்தல். இதை உணர 'தான்' அத்வைதமோ த்வைதமோ என்னும் சந்தேகமும் நீங்குகிறது. நான் என்னும் அகங்காரமும் நீங்குகிறது. இப்படி ஆன்ம ஸ்வரூபத்தில் திளைக்கும் உயர்ந்த நிலை எல்லா விவேகிகளுக்கும் ஒப்பாகும்.

सत्यं मृषा वा चिदिदं जडं वा दुःखं सुखं वेति मुधा विवादः ।
अदृष्टलोका निरहंप्रतीति- र्निष्ठाऽविकल्पा परमाऽखिलेष्टा ॥ ५ ॥
ஸத்யம்ʼ ம்ருʼஷா வா சிதி³³ம்ʼ ஜட³ம்ʼ வா து³:²ம்ʼ ஸுக²ம்ʼ வேதி முதா⁴ விவாத³: |
அத்³ருʼஷ்டலோகா நிரஹம்ப்ரதீதி- ர்னிஷ்டா²()விகல்பா பரமா()கி²லேஷ்டா || 5||


 

No comments: