கொஞ்ச நேரம் யோசித்து எழுதியது. யோசிக்க யோசிக்க இன்னும் தோன்றலாம்!
-------------
ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.
"நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூட காட்டிக்கொடுக்கிறீர்களாமே?”
குரு புன்னகைத்தார். (பெரியவர்கள் பல விஷயங்களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை.)
பண்டிதர் விடவில்லை. "எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக்கொடுக்க வேண்டும்.” (ஒரு குருவிடம் பாடம் கேட்கும் முறை இதுவல்ல.)
"சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும் போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக்கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”
(ஏனிப்படி செய்யசொன்னார்? இயற்கையோடு இயைந்து வாழ கற்க வேண்டும். சொல்லுவதை செய்கிறாரா என சோதிக்கவும் இருக்கலாம்.)
அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.
"என்ன ஆயிற்று?”
"நீங்கள் சொன்னது போல மழையில் நேற்று மாலை நின்றேன்.”
"ம்?”
"முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”
(ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவேண்டுமானால் முதலில் கரும்பலகையை துடைக்கவேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சரி செய்து கொள்ளவேண்டும். படிப்பது எல்லாம் ஒருவனை ஞானியாக்காது. இது வரை கற்றதெல்லாம் ஆன்மீகத்துக்கு உதவாமல் போகலாம் என்று புரிய வேண்டும். )
"பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”
(ஆன்மீகத்தை புரியாதவன் கற்றும் கற்றவனல்ல. )
8 comments:
ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவேண்டுமானால் முதலில் கரும்பலகையை துடைக்கவேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சரி செய்து கொள்ளவேண்டும். படிப்பது எல்லாம் ஒருவனை ஞானியாக்காது. இது வரை கற்றதெல்லாம் ஆன்மீகத்துக்கு உதவாமல் போகலாம் என்று புரிய வேண்டும். )
"பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”
(ஆன்மீகத்தை புரியாதவன் கற்றும் கற்றவனல்ல. )/
Thank you for nice sharing...
thats why i told you - you able to do nothing to something.
now you see. compare both. which give better clarity to reader.?
Kabeeranban also now not writing. atleast you must write as usual way.
i hope you will understand.
If you hurt my way of comment - forgive me.
hari om.
பாலு சர், ஐடியா என்னன்னா படிக்கறவரை சிந்திக்க வைக்கிறது. ஸ்பூன் பீட் செய்வது இல்லை. யோசிச்சா நிரைய கன்டுபிடிக்க முடியும் என்பதற்காகவே இப்படி எழுதினேன். அவரவர் யோசித்து கண்டுபிடிக்கும் பழக்கம் வர வேண்டும்; படிச்சேன் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போவது இல்லை.
எனக்கு வருத்தம் ஒன்றுமில்லை. ராம் ராம்!
Thank you for nice sharing...//
:-))
நீங்களும் இப்படி எழுதுங்களேன்!
Similar one from the life of Rama krishna paramahamsa . அவர் கிட்ட கடவுளை பாக்க வழி கேட்டவரிடம் பகவத் கீதை படித்து த்ராக்ஷை பழம் சாப்பிட சொன்னாராம் . கேட்டவர் எத்தனை கிலோ த்ராக்ஷை நு திருப்பிக்கேட்டாராம் . இப்படி யோசிச்சா ஜன்மத்துக்கும் பாக்க முடியாதுன்னாராம் ரமக்க்ருஷ்ணர்:))))
:-))
I LIKE SOCIETY OF JESUS PRINCIPLES TOO
THEY DEPICT THE PRINCIPLES OF ADHWAITHAM .jUST FEW HOURS AGO WE WERE DISCUSSING JESUIT'S STORIES .DELIGHTED TO READ IT HERE !!:)))) A. DE MELLOW'S STORIES ARE VALUABLE. IT IS ALL ABOUT BEING MINDFUL IN THOUGHT WORD AND DEED !!IS IT NOT :))MR TIVA NINE LIVES BY WILLIAM DALRYMPLE MIGHT INTEREST YOU .(LIGHT READING . DIFFERENT PERSPECTIVE .)
thanks! will look it up!
Post a Comment