உலகில்
நல்லதோ கெட்டதோ இல்லை;
நம்
நினைப்பே அப்படி ஒன்றை
உருவாக்குகிறது என்பதற்கு
இன்னொரு கதை சொல்லுவார்
மாஸ்டர்.
மாஸ்டரின்
தந்தை பெரிய அரசியல்வாதி.
தன்
கட்சிக்காரர் எதிர் கட்சிக்கு
போய்விட்டதை கேள்விப்பட்டு
‘துரோகி’ என்று திட்டிக்கொண்டு
இருந்ததை சின்ன வயதில் மாஸ்டர்
கேட்டார்.
‘அப்பா
அதெப்படி?
கொஞ்ச
நாள் முந்திதானே எதிர்கட்சிலேந்து
உங்க கட்சிக்கு வந்த ஒருவரை
புகழ்ந்துகொண்டு இருந்தீங்க?’
அப்பா சொன்னார்: "குழந்தே!
இப்பவே
முக்கியமான இதை எல்லாம்
தெரிஞ்சுக்கோ.
நம்ம
கட்சிலேந்து எதிர் கட்சிக்கு போயிட்டா அது துரோகம்.
எதிர்கட்சிலேந்து
நம்ம கட்சிக்கு வந்தா அது
மனம் திருந்தி வரது!"
No comments:
Post a Comment