Pages

Thursday, August 31, 2017

வேதம் - 7





மற்றவற்றில் மந்திரம் சொல்பவர்கள் அதன் உட் பொருளை அறிந்தார்களா, எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களது வாழ்கை நெறிகள், பண்புகள் இவற்றை எல்லாம் பற்றி சார்ந்து இருக்கிறது. ஆனால் ஒலி மட்டுமே ஆற்றல் பெற்றதாக இருக்கிற தன்மை வேத மந்திரங்களில் மட்டுமே இருக்கிறது.

இது எல்லோரிடமும் பலிக்குமா என்பது முக்கியமான கேள்வி. வேதத்தில் ஒலியில் மட்டும் மந்திரத்துவம் இருந்தால் யார், எப்படி சொன்னாலும் வினை வருமா? வேதத்தால் எல்லாவற்றையும் உருவாக்க முடியுமானால் இப்போது அதை சும்மா சொன்னாலே போதுமே?
 
பக்தி சாம்ராஜ்ய கதையில் பரிகாசமாக சொன்னாலும் பலன் உண்டு என்பார்கள். அதாவது வேடிக்கை கதையாக … ஸ்ரீரங்கத்து அரிசி என்று சொல்லி கலப்படம் செய்து விற்றானாம். கலப்படம் செய்தாலும் ஸ்ரீரங்கம் என்று சொன்னதால் நற்கதி கிடைத்ததாம் என்பது பக்தி கதை. இப்படி பட்ட விதிகள் மூன்றாவதான ப்ரீதி சாம்ராஜ்யத்துக்கு உண்டு, ஆனால் பகவானை மந்திர பூர்வமாக அணுகக்கூடிய விஷயங்களில் பொருந்தாது, அவன் கருணையே வடிவானவந்தான். ஆனால் அந்த கருணையை தீயிலும் அமிலத்திலும் காட்டாறு வெள்ளத்திலும் காண முடியுமா? அதில் அவனுடைய வீரியத்தைத்தான் காணலாம். எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் என்று எளிமை படுத்தியது எல்லாம் பக்தி மார்க்கத்தில்தானே தவிர ஸ்ருதி பிரக்ரியையிலே மிகக்கடுமையாக விதிகள் உள்ளன., உயரத்திலே கயிற்றின் மீது எண்ணெய் கிண்ணத்தை வைத்துக்கொண்டு நடப்பது போலத்தான் வேதங்களின் ஸ்வரங்களிலேயும் பிரயோகங்களிலேயும் நடக்க வேண்டும். இப்படி கட்டுப்பாடு உண்டு
 
இறைவனை நேரடியாக பக்தி மூலம் வழிபடும் போது தவறு செய்தால் என்ன ஆகும்? ஒருவன் இன்னொருவனுக்கு தவறு செய்கிறான். என்ன நடக்கும் என்பது தவறு செய்யப்பட்டவன் யார் என்பதை பொறுத்தது. எளியவனுக்கு, அசக்தனுக்கு சோகம் உண்டாகும். துணிவுள்ளவனுக்கு, சக்தனுக்கு கோபம் வரும். சர்வ சக்தனுக்கு மிகச்சிறந்த ஞானிகளுக்கும் இறைவனுக்கும் பரிவு, க்ருபை உண்டாகும். பாவம் தன்னிடம் தவறு செய்கிறானே என்று! அதனாலே இறைவனை ஆசார்ய முகமாக ஆரத்தழுவி பதம் பற்றி அவனை வழி படும் பக்தி நெறியிலே எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் கொள்ளலாம்; விதிகள் பொருந்தாது.

No comments: