மாஸ்டர்
ஒரு நாள் திடீரென்று "தீவினையை
எதிர்த்து போராட நீங்கள்
தயாராக மாட்டீர்கள்,
அது செய்யும்
நல்லதை பார்க்க முடியும்
வரை!” என்றார்.
தீவினை
நல்லதா என்று குழம்பினர்
சீடர்கள். ஒரு
நாள் முழுதும் மாஸ்டர் இதை
கண்டுகொள்ளவே இல்லை.
அடுத்த நாள்
இரண்டாம் உலகப்போரின்
ரேவன்ஸ்ப்ருக் யூத ஜெயில்
முகாமில் கண்டெடுக்கப்பட்ட
ஒரு ஒரு பிரார்த்தனையை
வெளியிட்டார். ஒரு
புத்தகத்தின் அட்டையில்
எழுதப்பட்டிருந்த அதில் பின்
வருமாறு கண்டு இருந்தது.
“இறைவா!
நல்லதையே
நினைக்கும் ஆண்கள் பெண்களை
மட்டுமல்ல கெட்டதையே நினைக்கும்
நபர்களையும் நினைவில்
கொள்ளுங்கள். அவர்கள்
எங்களுக்கு இழைத்திருக்கும்
தீங்குகளை மட்டும் நினைவில்
கொள்ள வேண்டாம். அதனால்
எங்களிடம் உருவாக்கி இருக்கும்
நல்லதையும் நினைத்துப்பாருங்கள்:
எங்கள் நட்பு,
விசுவாசம்,
தன்னடக்கம்,
எங்கள் தைரியம்,
பெருந்தன்மை,
விசாலமான
ஹ்ருதயம்... தீர்ப்பு
சொல்லும் நாளில் இவை அனைத்தின்
பலன்களும் அவர்களுக்கு
வெகுமதியாகவும் மன்னிப்பாகவும் இருக்கட்டும்.”
No comments:
Post a Comment