ஒரு
நாள் ஒரு சீடர் மாஸ்டரிடம்
நேரடியாகவே கேட்டுவிட்டார்.
நீங்கள் புனிதர்
ஆகிவிட்டீர்களா?
மாஸ்டர்
சொன்னார், எனக்கு
எப்படித்தெரியும்?
உங்களுக்கே
தெரியாது என்றால் யாருக்குத்தான்
தெரியும்?
மாஸ்டர்
சொன்னார்: சாதாரணமாக
இருக்கும் ஒருவரிடம் போய்
நீ சாதாரணமாக இருக்கிறாயா
என்று கேள்; ஆமாம்,
சாதாரணமாக
இருக்கிறேன் என்பார்.
அப்படியே
பைத்தியக்காரர் ஒருவரிடம்
போய் கேள். அவரும்
ஆமாம், சாதாரணமாக
இருக்கிறேன் என்பார்!
குறும்பு
சிரிப்புடன் தொடர்ந்தார்:
நீ பைத்தியம்
என்று உனக்குத்தேரிந்தால்
நீ அவ்வளவு ஒன்றும் பைத்தியம்
இல்லை அல்லவா? அதே
போல நீ புனிதனா என்று யோசிக்க
வேண்டுமானால் நீ அவ்வளவு
புனிதன் இல்லை சரியா?
புனிதத்துவம்
எப்போதும் அகங்காரம் போவதில்
இருக்கிறது.
No comments:
Post a Comment