Pages

Tuesday, September 25, 2018

பறவையின் கீதம் - 37





ஆக்கிரமித்த படைகளின் தளபதி மலை பிரதேச கிராமத்தின் மேயரிடம் சொன்னார்: நீங்க 'ஒரு துரோகியை மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரியும். அவனை ஒப்படைக்காவிட்டால் எங்கள் சக்தியை காட்டி உங்கள் மக்களை துன்புறுத்துவோம்.'

அந்த கிராமம் உண்மையிலேயே அப்போது ஒரு களங்கமற்ற ஆசாமியை மறைத்து வைத்து இருந்தது. ஆனால் ஒரு கிராமமே துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது மேயர் என்ன செய்ய முடியும்? கிராம சபையை கூட்டி நாள் கணக்கில் விவாதித்தும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆகவே உள்ளூர் பாதிரியிடம் போய் ஆலோசனை கேட்டார்கள். இருவரும் இரவு முழுதும் சாத்திரங்களில் தேடி பார்த்துவிட்டு கடைசியில் 'ஒரு தேசத்தையே காப்பாற்ற ஒருவன் இறப்பது மேல்' என்ற வாசகத்தை கண்டு பிடித்தார்கள்.

ஆகவே அவனை தளபதியிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

படையினர் அவனை இழுத்துபோய் அவனது அலறல் அந்த பிராந்தியம் முழுக்க எதிரொலிக்க அவனை துன்புறுத்தியே கொன்றார்கள்

இருபது வருடங்கள் கழித்து ஒரு இறைதூதர் அங்கே வந்தார். நேராக மேயரிடம் போய் இது குறித்துகேட்டார். 'எப்படி நீங்க இத செஞ்சீங்க? அவன் உங்களை எல்லாம் காப்பாத்த தேசத்த காப்பாத்த கடவுளால அனுப்பி வைக்கப்பட்டவர். அவரைபோய் பலி கொடுத்துட்டீங்க!'

'நாங்க என்ன தப்பு பண்ணோம்?' மேயர் கொஞ்சினார். 'நானும் பாதிரியும் சாத்திரங்கள பாத்து அதுல சொன்னபடிக்குத்தான் செஞ்சோம்.'

'அதான் பிரச்சினையே. நீங்க சாத்திரங்கள்ல பாத்தீங்க. அவனது கண்கள பாத்து இருக்கணும்.'

No comments: