ஒரு
சூஃபி கதை:
ஒரு
'இறந்துபோன'
மனிதன்
சவப்பெட்டியில் வைத்து புதைக்க
கொண்டு செல்லப்பட்டான்.
அவனுக்கு
உயிர் வந்துவிட்டது.
விழித்துக்கொண்ட
அவன் சவப்பெட்டியின் மூடியை
பலமாகத்தட்டினான். அதை
திறந்து பார்த்தனர்.
அவன் எழுந்து
உட்கார்ந்து 'என்ன
செய்யறிங்க? நான்
இன்னும் சாகலை' என்றான்.
கூடியிருந்தவர்கள்
நம்பவில்லை. கடைசியில்
ஒருவர் சொன்னார்: 'நண்பா,
நீ செத்துட்டதா
டாக்டரும் பாதிரிகளும்
சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க.
அதனால் நீ
செத்து போயாச்சு.'
அவரை முறையாக
புதைத்து விட்டார்கள்.
No comments:
Post a Comment