Pages

Thursday, September 27, 2018

பறவையின் கீதம் - 39





யாரோ புத்தரிடம் சொன்னார் 'நீங்க செய்யற உபதேசம் எல்லாம் சாத்திரங்களில இல்லை.'
புத்தர் சொன்னார் 'அப்படியானால் அவற்றை அதில் எழுதுங்கள்.'
கொஞ்சம் நெளிந்த அந்த மனிதர் மீண்டும் சொன்னார் 'ஆனா நீங்க சொல்லற சில விஷயங்கள் சாத்திரங்களில சொன்னதுக்கு எதிராவே இருக்கு.'
'அப்படின்னா அத திருத்துங்க.'

.நா சபையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. எல்லா மதங்களின் சாத்திரங்களும் திருத்தப்பட வேண்டும். எதெல்லாம் சகிப்பின்மைக்கும் வன்முறைக்கும் இடம் தருகின்றனவோ அவை நீக்கப்பட வேண்டும். மனிதர்களின் தன்மானத்தை அழிக்கும் எதுவும் நாசமாக்கப்பட வேண்டும்.
யார் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது என்று தேடிய பத்திரிகையாளர்கள் அவரைத் தேடிப் பிடித்து அவரது வீட்டுக்கு போனார்கள். அவரது விளக்கம் மிக எளிது. 'மக்களுக்காகத்தான் சாத்திரங்கள் இருக்கின்றன. சாத்திரங்களுக்காக மக்கள் இல்லை.'

No comments: