பழைய
எகிப்திய மன்னர் ஒருவரின்
கல்லறையில் ஒரு பிடி கோதுமை
கண்டெடுக்கப்பட்டது.
யாரோ அதை
விதைத்துப்பார்த்தார்கள்.
ஆச்சரியப்படும்படி
அது வளர்ந்து விட்டது!
ஞானிகளின்
சொற்கள் வாழ்கை சக்தியின்
விதைகள் போல. அவை
விதைபோல நெடுங்காலம்
உயிர்த்திருக்கக்கூடும்.
சரியான
தருணத்தின் தகுந்த பக்குவமான
இதயத்தை கண்டறியும் வரை.
சாத்திரங்களின்
சொற்கள் இறந்து போனவை என்று
நினைத்திருந்தேன். ஆனால்
என் இதயமல்லவோ இறந்து வறண்டு
இருந்தது? அங்கே
எப்படி எதுவும் விளைய முடியும்?
No comments:
Post a Comment