Pages

Wednesday, April 14, 2010

விக்ருதி



விக்ருதி வருஷம்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இன்று முதல் விக்ருதி வருஷம் ஆரம்பிக்கிறது. விக்ருதி என்பதற்கு மாற்றி செய்த என்பது பொருள் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் 'மாத்தி யோசி' என்று பிரபலமாகி வருகிறது இல்லையா?
நாமும் இந்த வருஷம் செய்யக்கூடியதை மாத்தி யோசிச்சு பார்க்கலாமா?

அதுக்கு முன்னே ஒரு சின்ன கதையை பார்க்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே இருக்கும். ஒரு பௌத்த மடாலயத்தில் சில சிறுவர்கள் இருந்தனர். குழந்தை  துறவிகள் ன்னு வைத்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு முறை ப்ரார்த்தனை நேரத்தில் ஏதோ தின்று கொண்டு இருந்தான். அவனுடைய நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. "ஏண்டா இப்படி செய்யலாமா?” என்று கேட்க, அவனும் "ஓ! செய்யலாமே!” என்று பதில் சொல்கிறான். ஆச்சரியப்பட்டுப்போன நண்பன் தலைமை குருவிடம் போய் "புத்தரை த்யானம் செய்யும் போது எதையும் சாப்பிடலாமா?” என்று கேட்டான். குரு கூடவே கூடாது என்றார். நண்பன் திரும்பி வந்து "பார்த்தாயா? நீ செய்தது தப்பு. குருவே சொல்லிவிட்டார்" என்றான். அவனோ "உனக்கு கேள்வி கேட்கத்தெரியவில்லை. இப்போது பார்!” என்று சொல்லிவிட்டு குருவிடம் போய் வணங்கிவிட்டு, “குருவே சாப்பிடும்போது புத்தரை த்யானிக்கலாமா?” என்று கேட்டான். "ஓ! த்யானிக்கலாமே! அது ரொம்ப நல்லது" என்றார் குரு!
மேலோட்டமா சிரிப்பா இருந்தாலும் அதிலே விஷயம் இருக்கு. இரண்டுமே ஒண்ணான்னு கொஞ்சம் ஊன்றி கவனிக்கணும்.

சாதாரணமாக நாம் லௌகீக வாழ்க்கை வாழ்கிறோம். உலகத்தில் இருக்கிற பல
ஈர்ப்புகளால அலைக்கழிந்து அல்லாடுகிறோம். நடுவில் ஏதோ கொஞ்ச நேரம்
இறைவனுடன் தொடர்பு வைக்கப்பார்க்கிறோம். பூஜையோ ஜபமோ ஏதோ செய்கிறோம்.
சத்சங்கத்தை தேடுகிறோம். இதில் இருக்கும் வரை எல்லாம் நன்றாக இருக்கிறது.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நல்ல அனுபவம் கிடத்தது. நண்பர் ஒருவர்
வீட்டுக்கு போய் இருந்தேன். அன்று மாலை காஞ்சி மஹா பெரியவருக்கு பூஜை,
ருத்திர சமக பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் எல்லாம் இருந்தன. சுமார்
30 பேர் பங்கு கொண்டார்கள். அதன் பின் கலந்துரையாடல் இருந்தது. முகமூடி,
நாமஜபம் என்று சிலதை விவாதித்தோம். வெகு உற்சாகமாகவே நேரம் போயிற்று.
எல்லாம் முடிந்து கிளம்பும் போது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர்
சொன்னார் "ஜி, எல்லாம் சரிதான். நல்ல விஷயங்கள்தான் பேசினோம். இதிலே
இருக்கும் வரை மனசு சுத்தமாகத்தான் இருக்கு. வீட்டுக்குப்போய் டிவி யை
போட்டதும் எல்லாம் காணாமல் போய் விடுகிறது!” என்றார். எல்லோரும்
சிரித்தோம்.
ஆனால் இவர் சொன்னது உண்மைதானே? சத்சங்கத்தில் மனசு தூய்மை ஆகிவிட்டதாக
நினைக்கிறோம். உலக சமாசாரங்களில் ஈடுபடும் போது மனசு பழைய நிலைக்கு
திரும்பி விடுகிறது.
நாம பெரும்பாலான நேரம் உலக வாழ்க்கையில இருந்து கொண்டு கொஞ்ச நேரம்
இறைவனுடன் இருக்கிறோம் இல்லையா? ஆரம்ப காலத்தில் இது போதும்; ஆனால்
எப்போதுமே இது போதுமா?
அதுக்குத்தான் மாத்தி யோசி என்கிறேன்.
நாம பெரும்பாலான நேரம் இறைவனுடன் இருந்து கொண்டு அவசியமான நேரம் உலக
வாழ்க்கையில இருந்து பார்த்தால் என்ன?
முடியுமா? இல்லை முடியனுமா? உங்க கருத்தைச் சொல்லுங்களேன்!
(இதன் அடுத்த பகுதி சுமார் ஒரு வாரம் கழித்து வெளியாகும்.)


8 comments:

தக்குடு said...

...:))

Ananya Mahadevan said...

ஆஹா.. அருமையான விளக்கம்! விக்ருதி ஆண்டை வித்தியாசமாய் வாழ்ந்து தான் பார்ப்போம். சத்சங்கம் நாம சங்க்கீர்த்தனம், ஜபம், இவற்றில் இருந்து பார்க்கலாம்! நன்றி திவா அண்ணா. உங்களுக்கும் விக்ருதி ஆண்டு சுபாகன்க்‌ஷுலு!

எல் கே said...

இந்த கதை போன்ற கருத்தை உடைய ஒரு பாடல் உண்டு . இப்ப மறந்து விட்டது. தக்குடு உனக்கு ஞாபகம் இருக்க

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜீவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sury siva said...

சத் ஸங்கத்தில் ஸதா ஒருவன் இருக்கும்பொழுது யாவருமே பரமனின் பாதங்களிலே இருக்கிறோம்.
அதனால் தான்,
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்.
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்.
நிஸ்சலதத்வே ஜீவன் முக்திஹி. என்பார் ஆதி சங்கரர்.

படிப்படியாக எப்படி செல்கிறது பாருங்கள். அது இல்லாமல், நேரடியாக ஜீவன் முக்தி நிலை செல்வோம், செல்ல இயலும் என்பது தான் அஞ்ஞானம்.

ஒருவன் விடாப்பிடியாக ஸத் ஸங்கத்வே இருந்தால் போதும். அதை விட்டு நீங்கும்பொழுது தான்
மற்றது ஞாபகம் வருகிறது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

திவாண்ணா said...

வருகை தந்த எல்லாருக்கும் நன்றி!
@ தக்குடு என்ன அர்த்தம் இதுக்கு?
@ அநன்யா தாங்கீஸ்!
@எல்கே யோசிச்சு சொல்லுங்க என்ன பாட்டுன்னு. கேள்வியே பட்டதில்லை!
@போகி.இன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
@ஜீவி பாத்து ரொம்ப நாளாச்சு! பொண்ணு சௌக்கியமா? அவ பிறந்த பிறகுதான் உங்களுக்கு நேரம் இல்லாம போச்சு போல இருக்கு! பதிவு எல்லாம் ரொம்ப குறைஞ்சு போச்சே!
@ சூரி சார் நமஸ்காரம். நீங்க சொன்ன அந்த சத்சங்கத்தைப்பத்திதான் விசாரமே! அடுத்த வாரம் நிச்சயம் படிங்க!

sury siva said...

இந்த பின்னூட்டத்தை எழுதிய பின்னே எனது நண்பர் திரு வெங்கடராமன் ( அவர் ஒரு வேதாந்தி = அது மட்டுமல்ல‌
எது எந்த புராணத்தில் எந்த உபனிஷத்தில் எந்த ஸ்லோகத்தில் இருக்கிறது என்று சொல்லும் அதீத நினைவாற்றல்
மிக்கவர். ஓய்வு பெற்ற ஒரு ஐ.ஆர்.எஸ் ) சொன்னார்.:

ப்ரக்ருதி, விக்ருதி என்று தொடர்ந்து வரும் ஸ்லோகம் சொல்லுங்கள் என்றார். விழித்தேன். தேவி மஹாலக்ஷ்மி யை
வர்ணனை செய்யும்பொழுது, ஆதி சங்கரர் முதற்கண் அவளை ப்ரக்ருதி, பிறகு விக்ருதி என்று சொல்கிறாரே பார்த்தீர்களா என்றார். என் கண்களை இன்னும் அகலமாக விரித்தேன்.

ப்ரக்ருதி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார். நான் இயற்கை என்றேன்.
அது பொது அர்த்தம்.

That which is unmanifest is prakruthi. That which manifests is vikruthi
என்றார்.

புரிந்தால் போல் இருந்தது.

மாயா ரஹித பிரும்மம் எந்த ஸ்வரூபமும் இல்லாமல் இருக்கும் நிலை ப்ரக்ருதி. ப்ரக்ருதி எல்லோராலும் உணர இயலாது. ஆகவே தான் அந்த பர ப்ரஹ்ம ஸ்வரூபிணியாகப்பட்டவள் சகல ஜீவி ராசிகளிடத்தும் அபார கருணை கொண்டு, ஒரு உருவத்துடன், குணாலங்களால் நம்மால் உணரப்பொடும்பொழுது விக்ருதி. அப்பொழுது அவள் மாயா
ஸஹித ப்ரும்மம். அப்பொழுது அது விக்ருதி.

ஒன்று அதுவாகவே இருப்பது ப்ரக்ருதி. சற்று மற்றவர் உணரும்படி இருப்பது விக்ருதி.

இங்கேயும் பார்க்கலாம்:
Prakriti

(Sanskrit) A compound consisting of the prepositional prefix pra, meaning "forwards" or "progression," and kriti, a noun-form from the verbal root kri, "to make" or "to do." Therefore prakriti means literally "production" or "bringing forth," "originating," and by an extension of meaning it also signifies the primordial or original state or condition or form of anything: primary, original substance. The root or parent of prakriti is mula-prakriti or root of prakriti. Prakriti is to be considered with vikriti - vikriti signifying change or an alteration of some kind, or a production or evolution from the prakriti which precedes it.



As an illustration, the chemical elements hydrogen and oxygen combine in the proportion H2O, producing thus a substance known in its most common form as water; but this same H2O can appear as ice as well as vapor-gas; hence the vapor, the water, and the ice may be called the vikritis of the original prakriti which is the originating hydrogen and oxygen. The illustration is perhaps not a very good one but is suggestive.



In common usage prakriti may be called nature in general, as the great producer of entities or things, and through this nature acts the ever-active Brahma or Purusha. Purusha, therefore, is spirit, and prakriti is its productive veil or sheath. Essentially or fundamentally the two are one, and whatever prakriti through and by the influence of Purusha produces is the multitudinous and multiform vikritis which make the immense variety and diversity in the universe around us.



In one or more of the Hindu philosophies, prakriti is the same as sakti, and therefore prakriti and sakti are virtually interchangeable with maya or maha-maya or so-called illusion. Prakriti is often spoken of as matter, but this is inexact although a very common usage; matter is rather the "productions" or phases that prakriti brings about, the vikritis. In the Indian Sankhya philosophy pradhana is virtually identical with prakriti, and both are often used to signify the producing element from and out of which all illusory material manifestations or appearances are evolved.

சுப்பு ரத்னம்.
http://pureaanmeekam.blogspot.com