Pages

Wednesday, April 7, 2010

விசார சங்கிரகம் -25



28.ப்ரத்யாகாரத்தில் ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்கச் சொல்லியதின் தாற்பரியமென்ன?

ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் தாற்பரிய மிதுவாம். ப்ரணவமென்பது அகார உகார மகார அர்த்தமாத்திரை யென்னும் மூன்றரை மாத்திரைகள் கூடிய ஓங்காரமாம். இவற்றில் அகாரமென்பது ஜாக்ர விச்வஜீவ ஸ்தூல தேகங்களென்றும் உகாரமென்பது ஸ்வப்ன தைஜஸஜீவ சூக்ஷ்ம தேகங்க ளென்றும் மகார மென்பது சுழுப்தி பிராஜ்ஞ ஜீவ காரண தேகங்களென்றும் அர்த்த மாத்திரை யென்பது துரியம் அல்லது அஹம் சொரூப மென்றும் இதற் கப்பாற்பட்ட நிலை துரியாதீதமாகிய ஆநந்த மாத்திர சொரூப மென்றும் சொல்லப்படும். முன் தியானத்திற் கூறிய இந்நான்காவதான அஹம் சொரூபமே மற்ற அகார உகார மகாரங்களென்னும் மூன்று மாத்திரைக ளடங்கியுள்ள அமாத்திரை சொரூப மென்றும் மௌனாக்ஷர மென்றும் அஜபை யென்றும் ஜபியாமல் ஜபித்தலென்றும் பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் கூறப்படும். இவ்வெதார்த்த அர்த்தம் சித்தித்தற்பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம்.இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே சமாதி யெனப்பட்டு நிரதிசயாநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

28.நாம ரூபங்களிலே மனசை போக விடாம ஒரு முகப்படுத்த சொன்னதிலே (ப்ரத்யாகாரத்தில) ப்ரணவத்தை மனோ மயமா ஏன் தியானிக்கச் சொன்னாங்க?
ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் காரணம் இதான்: ப்ரணவமென்கிறது என்ன? அ உ ம ன்னு 3 எழுத்துக்கள். அப்புறம் எழுத்தில்லாம பாதி மாத்திரை. இதெல்லாம் சேர்ந்தது ஓங்கார சப்தம்.
இவற்றில:
அகாரம் என்பது ஜாக்ர, விச்வ, ஜீவ ஸ்தூல தேகங்கள்
உகாரம் ஸ்வப்ன, தைஜஸ, ஜீவ சூக்ஷ்ம தேகங்கள்
மகாரம் சுழுப்தி, பிராஜ்ஞ, ஜீவ காரண தேகங்கள்
அர்த்த மாத்திரை என்பது துரியம் அல்லது அஹம் சொரூபம். (இதெல்லாம் ஞான வழி முதல் பாகத்திலே இருக்கு. மறந்து போயிருந்தா தேடிப்பாருங்க!)
இதற்கு அப்பாற்பட்ட நிலை துரிய அதீதம் (துரியத்தை தாண்டியது) ஆகிய ஆநந்த மாத்திர சொரூபம் என்றும் சொல்லப்படும்.
முன் தியானத்திலே சொன்ன இந்த நான்காவதான அஹம் சொரூபம் என்னன்னா,
மத்த அகார உகார மகாரங்கள் என்னும் மூன்று மாத்திரைகள் அடங்கியுள்ள அமாத்திரை (கால அளவுக்குள்ளே வராத) சொரூபம். [அர்த்த மாத்திரைன்னு சொல்வது கொஞ்சம் குழப்பறதுதான். அது ஏதோ கால அளவை குறிக்கிறதா தோணும். அப்படி இல்லை. அமாத்திரை என்கிறதே சரியான அர்த்தத்தை கொடுக்கிறது.] மௌனாக்ஷரம் என்றும்; அஜபை என்றும்; ஜபியாமல் ஜபித்தலென்றும்; பஞ்சாக்ஷரம் முதலான மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திரம் என்றும் கூறப்படும். இந்த எதார்த்த அர்த்தம் சித்திக்கனும்னே ப்ரணவத் தியானம் செய்யப்படுகிறதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே (state) சமாதி யெனப்பட்டு நிர் அதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.
{ஓங்காரத்தின் முடிவில என்ன இருக்கும்? மௌனமே! நிர்குண பிரமத்தை சப்தத்தால உணர்த்த முடியாது. மௌனமே சுட்டிக்காட்டும்.}
இந்த யதார்த்த அர்த்தம் சித்தித்தல் பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே (state) சமாதி யெனப்பட்டு நிர் அதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி ஒன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

No comments: