38.ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே யிருந்தும் அங்ஙனமாய தனது சுபாவ நிலையினை அறிய வொட்டாமல் மறைப்ப தெது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறந்த மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.
ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே இருந்தும் அப்படிப்பட்ட தனது சுபாவ நிலையினை அறிய விடாமல் மறைப்பது எது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறைத்தது எதுவென்றால் மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.
39.ஜீவன் தன்னை மறந்ததுண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அனுபவம் தோன்றுவதற்கேது வென்னை?
[ஜீவன் தன்னை மறந்தது உண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அனுபவம் தோன்றுவதற்கு ஹேது என்ன?]
ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்து விடுவதில்லை. நான் ஆன்மாவென்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத்தோற்றுவிக்கிறதே யன்றி சத்தாகவும் நித்தியமாகவுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.
ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்து விடுவதில்லை. நான் ஆன்மா என்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத்தோற்றுவிக்கிறதே அன்றி சத்தாகவும் நித்தியமாகவுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.
No comments:
Post a Comment