40.ஜீவன் முக்த, விதேக முக்தர்களின் இலக்கணங்களெவை?
தேகம் நானல்ல; ஆன்ம சொரூபமாக விளங்கும் ப்ரஹ்மமே நான். பரிபூரண சொரூபியான என்னில் தேகாதி ப்ரபஞ்சங்கள் யாவும் ஆகாய நீலம் போன்று வெறுந்தோற்ற மாத்திரமேயாம் என்னுந்திட நிச்சய முள்ளவனே ஜீவன் முக்த னானாலும் மனோ லயமில்லாத வரையில் ப்ராரப்தவசத்தால் தோற்றும் த்ருஷ்ட விஷயங்களில் ஏக தேசம் துக்கம் தோன்றவும் கூடும். மனச்சலனம் நீங்காமையால் ஆநந்தானுபவ மிருக்காது. நெடுங்கால த்யானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலனமுமான மனத்திற்கே ஆத்மானுபவம் கூடும். இவ்விதம் சூக்ஷ்மமனதோடு சொரூபாநுபவமு முள்ளவனே ஜீவன் முக்தனெனப்படுகிறான். இந்த ஜீவன் முக்தி ஸ்திதியே நிர்க்குண ப்ரஹ்மமென்றும் துரிய மென்றும் சொல்லப்படுகிறது. இந்த சூக்ஷ்ம மனதும் லயித்து சொரூபாநு பவமு மின்றி ஆநந்தக் கடலில் மூழ்கி ஒன்றுந் தோற்றாமல் அம்மயமாக விருப்பவனே விதேக முக்தனெனப் படுகிறான். இவ்விதேக முக்தி ஸ்திதியே நிர்க்குணாதீத ப்ரஹ்ம மென்றும் துரியாதீத மென்றும் சொல்லப்படுகிறது. இதுவே முடிவு. துக்கசுக தாரதம்மிய பேதத்தால் பிரமவித்து, வரன், வரீயான், வரிஷ்டன் என நான்கு வகையாக கூறும் ஜீவன் முக்த பேதங்கள் பார்க்கும் பர திருஷ்டியை பற்றியன வன்றி ஞானமுக்தி பேத முண்மையிலில்லை.
தேகம் நான் அல்ல; ஆன்ம சொரூபமாக விளங்கும் ப்ரஹ்மமே நான். ஆகாய நீல நிறம் தோன்றுவது போல, பரிபூரண சொரூபியான என்னில் தேகம் முதலான ப்ரபஞ்சங்கள் யாவும் வெறுந்தோற்றம் மாத்திரமேயாம். இந்த திட நிச்சயம் உள்ளவனே ஜீவன் முக்தன். அப்படி ஆனாலும், மனோ லயம் இல்லாத வரையில் ப்ராரப்த வசத்தால் தோற்றும் த்ருஷ்ட விஷயங்களில் ஒரேயடியாக துக்கம் தோன்றவும் கூடும். மனச்சலனம் நீங்காமையால் ஆநந்த அனுபவம் இருக்காது. நெடுங்கால த்யானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலனமுமான மனத்திற்கே ஆத்மானுபவம் வரக் கூடும். இவ்விதம் சூக்ஷ்ம மனதோடு சொரூப அநுபவமும் உள்ளவனே ஜீவன் முக்தன் எனப்படுகிறான். இந்த ஜீவன் முக்தி ஸ்திதியே நிர்க்குண ப்ரஹ்மமென்றும் துரிய மென்றும் சொல்லப்படுகிறது. இந்த சூக்ஷ்ம மனதும் லயித்து சொரூப அநுபவமும் இன்றி ஆநந்தக் கடலில் மூழ்கி ஒன்றுந் தோற்றம் இல்லாமல் அந்த மயமாக இருப்பவனே விதேக முக்தன் எனப் படுகிறான். இந்த விதேக முக்தி ஸ்திதியே நிர்க்குணாதீத ப்ரஹ்மம் என்றும் துரியாதீதம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவே முடிவு. துக்க சுக தார தம்மிய பேதத்தால் பிரமவித்து, வரன், வரீயான், வரிஷ்டன் என நான்கு வகையாக கூறும் ஜீவன் முக்த பேதங்கள் வெளியிலிருந்து பார்ப்போரின் கண்ணோட்டத்தை பற்றியன அன்றி ஞான முக்தி பேதம் உண்மையில் இல்லை.
வாழ்த்து
மாசிவன்றா னேயாய் மனிதனுமாய் வாழ்ரமண
தேசிகன்றாள் வாழ்க தினம்.
மாசிவன் தானேயாய் மனிதனுமாய் வாழ் ரமண
தேசிகன் தாள் வாழ்க தினம்.
ஓம்
சாந்தி சாந்தி சாந்தி:
சுபம்.
5 comments:
thanks for sharing.
you going to giving pdf ?
விடாம படிச்ச பாலு வுக்கு நன்றி. பிடிஎப் சில நாட்களிலே வலையேத்திடலாம்.
//இவ்விதம் சூக்ஷ்மமனதோடு சொரூபாநுபவமு முள்ளவனே ஜீவன் முக்தனெனப்படுகிறான். //
விடாமப் படிக்கிறேன், கமெண்டறதில்லை. இந்த சொருப அநுபவம்??? புரியலை! நடு நடுவிலே இப்படி நிறையப் புரியறதில்லை, அதான் பின்னூட்டமே கொடுக்கிறதில்லை. திரும்பத் திரும்பப் படிச்சுப் பார்த்துக்கிறேன். :((((((
ஸ்வ ரூபம் உணர்வு பூர்வமாக. பாக்கிற ஸ்வ ரூபம் இல்லை. உணருகிறது.இது அட்வான்ஸ்ட் லெவெல். யார்கிட்டேயானா பேசி புரியணும். படிச்சு புரியறது கொஞ்சம் கஷ்டம்.
mmmmmm??????
Post a Comment