Wednesday, November 4, 2009
ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-3
லினக்ஸ் புதுசு நிறுவப்போய் பேக் அப்ப பண்ணது எல்லாம் எங்கேன்னு தேடறேன். அதானால தாமதம்.
------------------
முன்னே பணி இட மாற்றுதல் ஒருவர் மனைவிக்கு கிடத்ததாக சொன்னேன் இல்லையா? அவர்கள் ஏழு வருடங்களாக முயற்சி செய்து வந்ததை சொல்லாமல் விட்டு விட்டேன். ஆமாம் ஏழு வருட முயற்சியில் கிடைக்காததுதான் காயத்ரியால் கிடைத்தது.
முதல் வருஷம் காயத்ரி ஜபயக்ஞம் நடத்திய போது அதை வருடா வருடம் நடத்தும் கற்பனை ஏதும் இல்லை. நிகழ்ச்சி முடிந்த பின் என் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசிக்கொண்டு இருந்த போது இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதைப்பற்றி யோசிக்கச்சொன்னார். நாங்களும் அப்படி செய்ததில் அவரவர் பகுதியில் யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களுடன் பேசியதில் அனைவரும் இதை வரவேற்றதாகவும் அடுத்தது எப்போ என்று கேட்பதாகவும் சொன்னார்கள். அடுத்த வருடமும் இதே கால கட்டத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
நவம்பர் மாதம் வேலையை துவக்கினோம். இந்த முறை கொஞ்சம் அலட்சியம் வந்துவிடக்கூடும்,மெத்தனமாக இராதீர்கள் என்று எச்சரித்தும் ஒருங்கினைபாளர் பெரும்பாலானோர் அசட்டையாக இருந்துவிட்டனர். எல்லாரும் போன முறை போல ஜபம் செய்துவிடுவார்கள் என்று நம்பிவிட்டனர். களப்பணிதொய்ய அது பதிவு செய்தோர் எண்ணிக்கை ஜப எண்ணிக்கை இரண்டிலும் பிரதிபலித்தது.
இரண்டாம் ஹோமம் 18-06-2000 அன்று முன் போல டவுண்ஹாலிலேயே!
இந்த முறை 62 பேர்கள்தான். இருந்தாலும் மொத்த எண்ணிக்கை ரொம்பவும் குறையவில்லை. என்னடா என்று பார்த்தால் ஒருவர் 3 லட்சம் செய்து இருந்தார்!
இந்த ஜபகாலத்தில் ஒரு சில கூடுதல்கள் ஏற்பாடு செய்து ஜப காலத்தில் என்ன அனுபவம் என்று விசாரிக்க ஆரம்பித்தோம். அந்த கூட்டத்க்கு வந்தவர்களில் ஒருவர் ரெய்கீ மாஸ்டர் ஸ்ரீ பா. முன்னே பத்து பதினைந்து நிமிடம் ரெய்கி கொடுப்பதில் தெரிந்த எபெக்ட் 3-5 நிமிடங்களிலேயே தெரிவதாக சொன்னார்.
2005 ஆம் ஆண்டு ஜபத்தில் பதிவு செய்து தொடர்புக்கு வந்தவர் ஸ்ரீ ரெ. பதிவு காலம் முடிந்து ஜப காலம் துவங்கியதும் பகுதி வாரியாக கூடுதல்கள் நடத்துவோம். ஜப யக்ஞத்தைப்பற்றிய முழு விவரம் சந்தேகங்களுக்கு பதில்கள் ஜபம் செய்ய உற்சாகப்படுத்துதல் எல்லாம் நடைபெறும். அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். திருமணம் ஆகவில்லை. ரயில்வே எஞ்சினீயராக வேலை. கூட்டம் நிகழ்ந்த இடத்துக்கு பக்கத்திலே வீடு இருந்ததால் தவிர்க்க முடியாமல் வர நேர்ந்தது போலும்.
எடுத்த எடுப்பிலேயே "பிராம்மணனைப்போல முட்டாள் இல்லை" என்று நான் சொல்ல கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. "பின்னே, இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் உபதேசம் ஆகி இருந்தும் அதை ஜபம் செய்து பயனடையாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று புலம்புபவர்களை என்ன சொல்வது?" என்று காயத்திரியின் பெருமை பக்கம் பேச்சை கொண்டு போய் விடுவேன்.
ரெ சில நடைமுறை சந்தேகங்களை கேட்டார். அந்த வருட ஜப காலம் முடிந்து ஹோமம் நடந்து முடிந்தது. கொஞ்சம் தயக்கத்துடன் என்னை பார்க்க வந்தார். இந்த ஹோமத்துக்கு நீங்கள் நன்கொடை வசூலிப்பது இல்லை என்று தெரியும், ஆனால் கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டார். இசைவை தெரிவித்ததும் ஒரு நல்ல தொகையை கொடுத்தார். பின்னாலேயே ஒரு பத்திரிகையை நீட்டினார்.
"என்ன சமாசாரம்?" என்று விசாரித்தேன்.
"எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ...அவசியம் வர வேணும்" என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்தி அனுப்பி வைத்தோம். பின்னால் விசாரித்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தன, இவர் ஆரம்பத்தில் ஒன்றும் ஆர்வமாக இல்லை. கூட்டத்தில் பிராமணனை திட்டப்போக அது இவரை கொஞ்சம் உசுப்பி விட்டது. கொஞ்சம் யோசித்தார். நாலு வருஷமாக பெண் பாத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒண்ணும் அமையவில்லை. இவர் ஏதோ சொல்கிறாரே, செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார். வீட்டில் டிவி யை தூக்கி பரணில் போட்டார். "டிவி அவசியமாக பார்த்தே ஆக வேண்டும்!" என்ற தன் தாயை தன் அண்ணன் வீட்டுக்கு கொஞ்ச காலம் இருந்து வர அனுப்பினார். ஒரு லட்சம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் செய்து பூர்த்தி செய்தார். திருமணமும் நிச்சயம் ஆகிவிட்டது.
ரெ இப்போது எங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவில் முக்கிய அங்கத்தினர்!
Labels:
காயத்ரி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
/* எடுத்த எடுப்பிலேயே "பிராம்மணனைப்போல முட்டாள் இல்லை" என்று நான் சொல்ல கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. "பின்னே, இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் உபதேசம் ஆகி இருந்தும் அதை ஜபம் செய்து பயனடையாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று புலம்புபவர்களை என்ன சொல்வது?" என்று காயத்திரியின் பெருமை பக்கம் பேச்சை கொண்டு போய் விடுவேன். */
முற்றிலும் உண்மை
நம்மவர்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை குறைந்து விட்டது போலும்.
பி.கு : /* அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. */
-- தயவு செய்து என்னிடம் இது வேண்டாம் :)
வாங்க விஜய். நீங்கதான் பொயட்ரி இன் ஸ்டோன் விஜியா? இல்லை வேறா?
நம்பிக்கை வர வர குறைஞ்சுதான் போச்சு மக்களுக்கு! ஆசையும் அதிகமாயிடுத்து! ம்ம்ம் கலி காலம்.
//-- தயவு செய்து என்னிடம் இது வேண்டாம் :) //
சரி சரி. அந்த வரியை நீங்க படிக்காதீங்க! :-))
/* நீங்கதான் பொயட்ரி இன் ஸ்டோன் விஜியா? இல்லை வேறா? */
எனக்கு இது என்னவென்றே தெரியாது.
என்னைப்பற்றி அறிய வேண்டும் என்றால்,மௌலி அண்ணாவை கேட்கலாம். ஒரு முறை நேரில் பார்த்ததுண்டு!!
அபிவாதயே ஆங்கிரச சைன்ய கார்க்ய த்ரயார்ஷ்ய ப்ரவரான்வித ஆபஸ்தம்ப சூத்திர யஜுஸ் சகாத்யாயி ஸ்ரீ விஜயராகவ ஸ்ர்மாநாமாஹம் அஸ்மிபோ!!
இதை மறந்துட்டேன்!!!
ஆயுஷ்மான் பவ விஜயராகவ ஸ்2ர்மா ஆ(3) . தீர்காயுஷ்யமஸ்து!
நேரா பார்த்தது மௌலியைதானே? என்னை இல்லியே? இப்பல்லாம் மறதி அதிகமாயிடுத்து. அதான் கேட்டேன்!
இப்போ உங்களையும் நேர்ல பார்க்கும் போல இருக்கிறது தாம்.
நீங்க
எங்கே
இருக்கீங்க?
"இப்போ எல்லாம் எதை வேண்டும் என்றாலும் கவிதை
என்று சொல்லலாம் போல!!"
அபிவாதனம் ல "கார்க்ய கோத்ரம்" சொல்ல விட்டுட்டேன்!!
கார்கேய ன்னு புரிஞ்சுகொண்டேன் விஜய்.
அப்புறம் உங்க பாணியிலேயே பதில் சொல்லணும்ன்னா
நான்
இப்போது
இங்கே
இருக்கிறேன்!
பரவாயில்லை. பிரவரத்தை கவிதையா சொல்லாம விட்டீங்களே!
அந்த இங்கே என்கிறது கடலூர்.
Post a Comment