Monday, February 8, 2010
விசார சங்க்ரஹம் 13
18.ஏகமாயும் அகண்டமாயும் விளங்கும் சொப்பிரகாச வடிவ ஆன்ம ஜோதியின் கண் அவஸ்தாத்ரயம், தேகத்ரயமாதிய கற்பனைகள் தோற்றுவதும்; தோற்றினும் ஆன்மா மாத்திரம் எப்போதும் அசலமாகவே யுள்ளதென்பது மெவ்வாறு?
ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) வுள் மனையில் தானே விளங்க கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக் கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.
ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) யுட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) வுள் மனையில் தானே விளங்க கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக் கடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.
ஒரு வீடு இருக்கு. வீட்டில உள்ளே ஒரு அறை. அதில ஒரு விளக்கு எரியுது. அதுக்கு வெளியே ஒரு அறை. இந்த ரெண்டுக்கும் நடுவே ஒரு கதவு இருக்கு. வெளி அறையிலேந்து முற்றத்துக்கு நடுவே ஜன்னல்கள் இருக்கு
இந்த முற்றத்தை ஸ்தூல தேகம் ஜாக்கிரத அவஸ்தையாக கற்பனை செய்யுங்க.
இதில் உள்ள ஜன்னல் வழியா வெளி அறையை பார்க்கலாம்.
வெளி அறை ஸூக்ஷும தேகம். ஸ்வப்ன அவஸ்தை.
இதையும் உள் அறையையும் பிரிக்கிறது ஒரு சுவர். உள் அறை காரண தேகம். (ஆணவம், கன்மம், மாயை)
அதுக்கு இருக்கிறது மஹத்தத்வம் என்கிற வாசல். அதுல இருக்கிற கதவு தூக்கம்.
இதுக்கு கொஞ்சமே கொஞ்சம் வெளியே ஒரு கண்ணாடி இருக்கு. அது அந்தக்கரணம்.
வெளியிருந்து பாத்தா வீட்டு முற்றம் மட்டுமே தெரியும்.
அதிலேந்து எட்டி ஜன்னல் வழியே பாத்தா உள் அறை தெரியும்.
உள் அறையில் போய் நின்னால்தான் கதவு திறக்கும்போது கண்ணடியில பிரதிபலிக்கிற உள்ளே இருக்கிற விளக்கை பார்க்கலாம். சரியா?
இப்ப ஆன்மாதானே எல்லாவற்றையும் பிரகாசிபிக்கிறது? இந்த ஆன்ம சக்தி இல்லாமல் ஒண்ணுமே இயங்காது. இது எப்படி வெளிப்படுதுன்னு பார்க்கலாம்.
ஆன்மா எப்பவும் பிரகாசிக்கும்.
அதை சுத்தி இருக்கிறது அவித்தை அல்லது காரண சரீரம். இது நித்திரை என்கிற ஆழ் உறக்க நிலை - ஸுஷுப்தி யால சூழப்பட்டு இருக்கு.
காலம் கருமம் பிராணன் ஆகியவற்றால இந்த உறக்க கதவு கலைஞ்சா ஆன்ம ஒளி அகங்காரம் வழியா வெளி அறையில பிரகாசிக்கும். இது ஸ்வப்ன நிலை இல்லையா?
இந்த வெளி அறையிலிருந்து முற்றத்துக்கு வெளிச்சம் வரணும்ன்னா அது இந்திரியங்கள் என்கிற ஜன்னல் வழியாதான் வரும்.
இப்ப ரிவர்ஸ்ல போகலாமா? ஏன் போகணும்? ஆன்ம தரிசனத்துக்கு.
பஞ்ச இந்திரியங்களையும் தாண்டிப்போக ஸ்வப்னம். அதையும் தாண்டிப்போக ஆழ் தூக்கத்தில அவித்தை. அகங்காரத்தையும் தாண்டிப்போக உள்ளே ஆன்மா மட்டுமே பிரகாசிக்கும்.
இப்ப படிச்சுப்பாக்கலாமா?
ஆத்ம (1) தீபம் சுஷுப்தியில் அவித்தை (4) உட் சுவரும் நித்திரைக் கதவும் கூடின காரண தேக (7) உள் மனையில் தானே விளங்க; கால கருமாதி பிராணணால் உறக்கக் (2) கதவைத் திறக்கவும் மஹத்தத்வ (3) வாயிற்படிக்கு அடுத்த அகங்காரக் (5) கண்ணாடி ஆத்ம பிரதிபலனைப் பிரகாசத்துடன் சொப்பன (8) நடுமனையையும் பஞ்சேந்திரியப் (6) பலகணிவழி ஜாக்ர (9) முற்றத்தையும் விளக்கி கால கருமாதி வாயுவால் நித்திரா கபாடம் மூடவே நனவு கனவுகளோடு நானற்று தான் (ஆன்மா) மாத்திரம் என்றும் விளங்குவதால் ஆத்மாவின் அசலமான இருப்பும் அகங்காரத்திற்கும் அதற்குமுள்ள பேதமும் அவஸ்தாத்ரய தேகத்ரயமாதியன தோற்றுவதும் இத்திருஷ்டாந்தத்தால் நன்கு விளங்கும்.
Labels:
ரமணர்,
விசார சங்க்ரஹம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!! ஏற்கெனவே கஷ்டமான பாடம், இதிலே உங்களோட விளக்கத்தைக் கொடுக்கலைனா எப்படி?? குழப்பம்! விளக்கு, உள் அறை, வெளி அறை,முற்றம் வரை ஓகே! :((((((((((
புரியுதோனு ஒரு எண்ணம் வந்தப்போவே ரிவர்சிலே போகணும்னதும் தடுமாற்றம்! :(((( மறுபடி படிச்சுக்கறேன், ஏறுமா பார்க்கலாம்!
ஹிஹி இதை எப்படி வேணுமானாலும்பார்க்கலாம். உள்ளிலிருந்து வெளி வந்தா ஆன்ம சக்தி எப்படி எல்லாத்திலேயும் பிஅதிபலிக்குதுன்னு தெரியும். ரமணர் முக்கியமா சொல்ல வந்தது அதான். அது புரிஞ்சாலே போதும்.
வெளியிருந்து உள்ளே போவது நாம் எப்படி ஆன்ம தரிசனம் பெறுவதுன்னு... சொந்த சரக்கு, கொஞ்சம் சொதப்பிட்டேன் போல இருக்கு
Post a Comment