Pages

Friday, February 12, 2010

விசார சங்கிரகம்-15



20. மனோபலமின்மைக்கும் காரணம் யாது?
ஆன்ம விசாரத்திற்குத் தன்னை அதிகாரியாகச் செய்கிற சாதனங்களான தியான யோக மாதியவையில் முன்னரே வேண்டிய அளவு கிரமமாக பயின்று, அதனால் இடையறாத சஜாதீய விருத்தியின் பிரவாகத்தை சஹஜமாகப் பெற்றிருக்கும் பரிபக்குவமுள்ள மனதாயிருந்தால் இவ்விசார சிரவணஞ் செய்தவுடனே தனது எதார்த்த சொரூபத்தை அபரோக்ஷமாகத் தெரிந்து எப்போதும் தன்னிலையிலிருந்து பரம சாந்தியுடன் விளங்கும். இங்ஙனம் பரிபக்குவமடையாத மனதிற்கு விசார சிரவணத்தால் உடனே அபரோக்ஷ ஞானமும் உப சாந்தமும் வாய்ப்பது துர்லபமே; என்றாலும் சிறிது காலம் மனவொடுக்கத்துக்குரிய சாதனங்களிற் பழகி வந்தால் காலக்கிரமத்தில் சித்தோபசாந்தம் சித்திக்கும்.

--மனோ பலம் இல்லைனா அதுக்கு காரணம் அது இன்னும் பரி பக்குவம் ஆகலை என்கிறதுதான். ஆத்ம விசாரத்துக்கு தன்னை அதிகாரியா செய்கிறதுக்கு சாதனங்கள் தியானம், யோகம் முதலானவை. இதில போதுமான அளவு பயிற்சி எடுக்கணும். அதுவும் முறையான பயிற்சி. இதனால மனசு கொஞ்சம் கூட இடையில்லாம இயல்பாக ஆன்மாவை நாடி பயணிச்சு கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட மனசு கேள்வி ஞானத்தின் பின்னணியிலே விசாரம் செய்தவுடன் தன் யதார்த்த சொரூபத்தை வெளிப்படையாக தெரிஞ்சு கொள்ளும்; தன்னிலையிலேயே நிற்கும். அந்நிலையிலே பரம சாந்தத்துடன் இருக்கும். இப்படி மனசு விசாரத்தாலே உடனே அந்நிலையை அடையலைன்னாலும் இந்த மன ஒடுக்க சாதனங்களில பழக பழக காலம் செல்ல செல்ல இந்நிலையில் லயிக்கும்.



3 comments:

Geetha Sambasivam said...

இது கொஞ்சம் ஓகே. புரியறாப்போல் இருக்கு.

Geetha Sambasivam said...

13க்குப் பின்னர் 14 தெரியலையே?? எனக்கு மட்டுமா??

திவாண்ணா said...

தப்பா நம்பர் போட்டு இருக்கேன் போல இருக்கு.ம்ம்ம்ம் இல்லை எடிட் பண்ணதா ஒரு சின்ன பதிவு போட்டேன்.