Pages

Monday, February 15, 2010

விசார சங்கிரகம் -16




21.மனவொடுக்கத்துக்குரிய சாதனங்களில் முதன்மையானதெது?
ப்ராண வொடுக்கமே மனவொடுக்கத்துக்குச் சாதனமாம்.

ப்ராண வாயுவை ஒடுக்குகிறதே மனசை ஒடுக்குவதில முதன்மையான சாதனமாம்.

22.ப்ராண நிரோதமுண்டாவ தெப்படி?
கேவல கும்பகத்தாலேனும் ப்ராணாயாமத்தாலேனும் ப்ராண நிரோதமுண்டாகும்.
கேவல கும்பகம் செய்வதாலேயும் அல்லது முறையான ப்ராணாயாமத்தாலேயும் ப்ராணன் ஒடுங்கும்.

23.கேவல கும்பகம் என்றாலென்ன?
இரேசக பூரகங்களின்றி ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம். இது ப்ராணோபாசனை முதலியவற்றால் சித்திக்கத்தக்கது.

24.ப்ராணாயாமம் என்றாலென்ன?
யோக சாஸ்திரங்களிற் கூறியுள்ள கணக்கின்படி இரேசக பூரக கும்பகங்கள் வாயிலாய் ப்ராணனை ஸ்திரப்படுத்துவதாம்.

சாதாரணமா ப்ராணாயாமத்தில மூச்சை உள்ளே இழுப்பதும் தக்க வைச்சு கொள்வதும் வெளியே விடுவதும் அங்கங்கள். இதோட வழி முறைகள் யோக சாஸ்திரத்திலே சொல்லி இருக்கு. வெறும் கும்பகத்திலே மூச்சை உள்ளே எடுக்கிறதும் வெளியே விடுகிறதும் அங்கங்களா இல்லை. இது ப்ராண உபாசனையால சித்திக்கும்.

25.ப்ராண நிக்ரகம் மனோநிக்ரகத்திற்குச் சாதனமா யிருப்பதெப்படி?
ப்ராணனைப் போலவே மனமும் வாயுவின் அம்சமாக லானும் இவ்விரண்டுக்குமே சலிக்குந் தன்மை சுபாவமாக லானும் இவ்விரண்டின் பிறப்பிடமும் ஒன்றே யாகலானும் இவ்விரண்டுள் ஒன்றி னொடுக்கமே மற்றதி னொடுக்கத்திற்கு காரணமாகலானும் ப்ராண நிரோதம் மன நிரோதத்திற்குச் சாதன மென்பதிற் சந்தேகமில்லை.

அதெப்படி ப்ராணனை நிறுத்தினா மனம் நிற்கும்?
அது இரண்டுக்குமே பல விஷயங்கள் பொது. இரண்டும் வாயுவோட அம்சம்; விடாம அலைந்து கொண்டே இருக்கும். இரண்டோட பிறப்பிடமும் ஒண்ணே. அதனாலஒண்ணு ஒடுங்கினா மற்றதும் ஒடுங்கும்.

2 comments:

Geetha Sambasivam said...

அப்பாடானு இருக்கு, கொஞ்சமாவது தெரிஞ்ச புரிஞ்ச விஷயமா இருக்கு! அதுவும் ப்ராணாயாமம்(ஆரம்பநிலைதான்) பண்ணிட்டு வந்து படிக்கிறப்போ இன்னும் நன்னாவே புரியுது. நன்றி.

திவாண்ணா said...

அப்பாடா! நானும் புரியறா மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன் போல இருக்கு! :P:P