24. வேற ட்ரிக் ஒண்ணும் இல்லையா?
பலதும் இருக்கு. நாமே சிலதையும் உருவாக்கிக்கலாம். உதாரணத்துக்கு ஒண்ணு. ப்ரணவத்தை மனசாலே வரையணும். ஸம்ஸ்க்ருத ரூபம் ன்னு வெச்சுப்போம். முழு ரூபத்தை மனக்கண்ணால பாத்து கொண்டு ப்ரணவத்தை சொல்லுவோம். அடுத்து மேலே ஆரம்பித்து முதல் வளைவு மனசால வரைஞ்சு கொண்டே வ்யாஹ்ருதிகளை சொல்லுவோம். இரண்டாவது வளைவை தொடர்ந்து வரைந்து கொண்டு ஸாவித்ரியின் முதல் அடி. இரண்டாம் அடி சொல்லிக்கொண்டே வால் மாதிரியான பகுதியை வரைவோம். மூன்றாம் அடிக்கு மேலே போடுகிற சந்திரனும் பிந்துவும். வரைந்து முடிந்ததை பார்த்து அடுத்த மந்திரத்தின் முதல் அடியான ப்ரணவம். இப்படியே சொல்லிக்கொண்டு வரைந்து கொண்டு போக மனசு நிலைப்பட வாய்ப்பு இருக்கு.
இது போல மந்திர ஜபத்தை செயலோடு இணைக்க மனம் நிலைப்படலாம். மூச்சு எடுத்துவிடுவது என்பது எப்படியும் நடக்கும் ஒன்று. இந்த மூச்சுடன் மந்திரத்தை இணைத்தும் ஜபம் செய்வதுண்டு. ஆனால் இதுக்கு பயிற்சியும் சீராக மூச்சு விடும் பழக்கமும் தேவை.
25. ஜபத்தின் போது ஏன் இப்படி மற்ற விஷயம் எல்லாம் நினைவுக்கு வருது?
அப்படி அலை பாயறதுதான் மனசோட இயல்பு. அப்படி இருக்கும்போதுதான் அதுக்கு மனசு ன்னு பெயர்.26. பின்னே ஜபத்துல சரியா நின்னுட்டா?
அப்ப அதுக்கு சித்தம் ன்னு பெயர். " சித்தத்தை சிவன் பால் இருத்தி" ன்னு பாட்டு கேட்டு இருப்பீங்களே?27. அப்ப மன ஓட்டத்தை நிறுத்தனும்?
ஆமாம். நாம் எவ்வளவுக்கெவ்வளவு மன ஓட்டத்தை நிறுத்தி வைக்கறோமோ அவ்வளவுக்கவ்வளவு பகவானோட செயல் திட்டம் நிறைவேறும். அப்ப எல்லாமே சரியா நடக்கும். இல்லைன்னா நம்மோட அஞ்ஞானத்துல முடிவுகள் எடுப்போம்.28. மந்திரத்துல கவனிக்க ஏதும் விஷயம் இருக்கா?
நிறைய இருக்கு. சரியா உச்சரிப்பு தெரிஞ்ச ஒத்தர்கிட்டே போய் நாம சரியா சொல்கிறோமா ன்னு சீரியஸா சோதனை பாத்துக்கறதே நல்லது.இருந்தாலும் பெரும்பாலானவர்கள் செய்கிற தப்புக்களை பார்க்கலாம்.
முதல் இரண்டு வ்யாஹ்ருதிகளும் நாலாவது ப வில் ஆரம்பிக்குது. நல்லா அழுத்தி பூர் புவ ன்னு சொல்லணும். வரேண்யம் என்கிறதுல ரே மேலே தூக்கி நீட்டி ரேஏஏ ன்னு சொல்லணும். பர்கோ என்பதும் நாலாவது ப. தீமஹி என்பதில தீ 4 ஆவது. தியோ வில தி யும் அப்படியே. ந:ப்ரசோதயாத். இதில் : ஐ ஆங்கில எஃப் ஆக உச்சரிக்கணும். நிறைய பேர் ப்ரஜோதயாத் என்கிறாங்க. இதையும் கவனிக்கணும்.
ஸ்வரங்களை சொல்லிக்கொடுக்கும்போது சரியா கவனித்து பழகணும்.
29. இந்த மந்திரத்தோட பெருமை பத்தி சொல்லுங்களேன்.
நாம சந்தியாவந்தனத்தோட செய்கிற காயத்ரி த்ரிபதா காயத்ரி எனப்படும்.
2 comments:
நல்ல விளக்கம். பல விஷயங்களும் புரிகின்றன.
நன்றி!
Post a Comment