Pages

Wednesday, June 15, 2011

சந்திர க்ரஹணம்



இந்த பௌர்ணமிக்கு சந்திர க்ரஹணம் வருகிறதல்லவா?
அதைக்குறித்து சிலதை பார்க்கலாம்.

சந்திர க்ரஹணத்துக்கு 9 மணி நேரம் முன் சாப்பிடலாம். அதற்குள் சாப்பிடக்கூடாது.
முக்கியமாக க்ரஹணத்தின் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

க்ரஹணம் பிடித்து இருக்கும் போதே சில சமயம் சந்திரன் அஸ்தமனமாகிவிடும். அப்படியானால் அன்று உபவாசம் இருந்து சந்திரனை பார்த்த பின்பே சாப்பிட வேண்டும்.

க்ரஹண காலத்தில் எல்லா நீர்நிலைகளும் கங்கைக்கு சமமாகும்; எல்லா ப்ராம்ஹணர்களும் வஸிஷ்டருக்கு சமமாவார்கள். ஆகவே அப்போது செய்யும் நீராடல் கங்கையில் செய்த நீராடலுக்கு சமமாகும்; கொடுக்கும் தானம் வஸிஷ்டருக்கு கொடுத்ததுக்கு சமமாகும்.

க்ரஹண காலத்தில் அன்னம் முதலியன மீதியாக இருந்தால் க்ரஹணம் விட்ட பின் அவற்றை உண்ணக்கூடாது. நீக்கிவிட வேண்டும்.

ஊறுகாய், தயிர் போன்ற சேமித்து வைத்தே உண்ணும் பொருட்களை பாதுகாக்க அவற்றில் தர்ப்பை புல்லை துண்டித்து போட வேண்டும்.
சூரியனும் சந்திரனும் ஓஷதிகளுக்கு (மருந்து பொருட்கள்) அதிகாரிகளாவார்கள். ஆகவே இப்படி ஏற்பாடு.
க்ரஹண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது.

க்ரஹண காலத்தில் செய்யும் ஜபமும் தானமும் பன் மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

அதே போல சந்திர க்ரஹணம் விடும் போது செய்யும் தர்ப்பணமும் சக்தி வாய்ந்ததாகும்.

எந்த நக்ஷத்திரத்தில் க்ரஹணம் பிடிக்கிறதோ அந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்; அதன் அனு ஜன்ம, த்ரிஜன்ம நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் (குறிப்பிட்ட நக்ஷத்திரத்தின் முன் 7 ஆவது, பின் ஏழாவது நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்) சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதாவது பின் வரும் ஸ்லோகத்தை ஓலையில் எழுதி க்ரஹண காலத்தில் நெற்றியில் கட்டிக்கொண்டு (பட்டம் கட்டிக்கொள்வது என்பர்) இருந்து க்ரஹண காலம் முடிந்தபின் ஓலையை ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பூசனிக்காய், கொஞ்சம் இயன்ற தக்ஷிணையுடன் கொடுத்துவிட வேண்டும்.

"இந்த்ரோ அனலோ யமோ ரிக்ஷோ வருணோ வாயு ரேவச க்ளத்து இந்து உபநாத உத்தவ்யதாம் மம."

பொருள்: இந்திரன், அக்னி,யமன், நிருருதி, குபேரன், வருணன், வாயு ஆகியோர் சந்திர க்ரஹணத்தால் உண்டான துக்கத்தை அகற்றட்டும்.

சிரத்தை உள்ளோர் க்ரஹணம் பிடிக்கும் முன் குளித்து ஜபம் ஆரம்பித்து க்ரஹணம் விட்டபின் மற்றவர் போல குளிக்க வேண்டும்.
எல்லோருமே க்ரஹணம் விட்ட பிறகு குளிக்க வேண்டும். இப்படி குளிக்காமல் எந்த தேவ காரியத்துக்கும் சுத்தி இல்லை.

9 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

ellam sari tharpanam unda llaya.soonya thithi no tharpanamnu sollarale

தி. ரா. ச.(T.R.C.) said...

yes

திவாண்ணா said...

சார், சூன்யத்திதி என்கிறது சிராத்தம் செய்ய பார்க்கிற விஷயம். க்ரஹண தர்ப்பணம் உண்டவே உண்டு.

Geetha Sambasivam said...

தர்ப்பணம் உண்டு. என்னோட நக்ஷத்திரம், யாரு பட்டம் கட்டுவா?? ஹூம்ம்ம்,பட்டம் கட்டிக்க இப்படியாவது ஒரு சான்ஸ்கிடைக்கும்னு நினைச்சேன். அது போச்சு! :P

சிறியவன் said...

grahanathapo rishikeshla gangasnanamum, ridvikkukalukku sambavanai seyra bagyam kidaichathu.

திவாண்ணா said...

கொடுத்து வெச்சவர்! :-)

Geetha Sambasivam said...

நீங்க பெரியவர், சிறியவர் இல்லை. :D

சிறியவன் said...

@thiva, geetha madam
ellam ungal asirvatham. I got transfer to delhi from chennai.

Geetha Sambasivam said...

அப்படியா, சிறியவரே, உங்கள் மனதுக்குப் பிடித்த இடம் எனில் வாழ்த்துகள். மீண்டும் ஆசிகள்.