பாஷான பாரிஷ் அது.
பாதிரியார் மாஸ் முடிந்ததும் எல்லோரிடமும் பேச்சுக் கொடுக்க நபர்களை அமர்த்தி இருந்தார்.
பாதிரியாரின் மனைவி "இத நீங்களே செய்யணும். நாம் இங்க வந்து நாலு வருஷமாச்சு. இன்னும் யாரையும் தெரிஞ்சுக்காம இருக்கிறது அவமானம் இல்லே?” என்றாள்.
சரி என்று அடுத்த ஞாயிறு மாஸ் முடிந்ததும் வாசல் பக்கம் போய் நின்று கொண்டார், முதலில் வெளியே வந்த பெண்மணியை பார்த்து " எப்படி இருக்கீங்க? நீங்க இங்கே வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்" ன்னார். அந்த பெண்மணி கொஞ்சம் அதிர்ச்சி ஆனாப்போல இருந்தது. “ நான் நல்லாத்தான் இருக்கேன்"
"அடிக்கடி வாங்க; புதுசா வரவங்களைப் பார்த்தா எங்களுக்கு சந்தோஷமே!”
“சரிங்க"
“நீங்க இந்த சர்ச் பகுதியிலேயா வசிக்கீறீங்க?”
பெண்மணிக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. பாவம் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்க போல இருக்கு.
“பரவாயில்லை, உங்க அட்ரஸ் கொடுங்க. நானோ என் மனைவியோ வந்து உங்களை பார்க்கிறோம்.”
“நீங்க ரொம்ப தூரம் போக வேண்டாம் சார். நான்தான் உங்க வீட்டு சமையல்காரி!”
3 comments:
அவர் மனைவியைத் தான் இப்படிக் கேட்டதாய் நினைவு! :D
பதிலே வராட்டிக்கூடப் பின்னூட்டம் கொடுப்போமாக்கும்! :(
ஹாஹாஹா! இது 4 மச்!
Post a Comment