குரு பிரசங்கத்தில் சொன்னார்:
ஒரு இசையமைப்பாளரின் புலமை ஸ்வரக்கோப்பில இருக்கு. ஆனால் என்னத்தான் அதை ஆராய்ஞ்சாலும் அவரோட புலமை அதில இன்னதுதான்னு தெரியாது. ஒரு கவிஞரோட புலமை சொற்களில இருக்கு. ஆனால் என்னத்தான் அதை ஆராய்ஞ்சாலும் அவருக்கு ஊக்கம் எங்கிருந்து வந்ததுன்னு தெரியாது. அதைப்போலத்தான் கடவுளும் தன் படைப்புகளில வெளிப்படுகிறார். ஆனால் அவற்றை எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ஞ்சாலும் அதில் கடவுளை பார்க்க முடியாது. உங்க உடம்பை எவ்வளவு ஆராய்ஞ்சாலும் உங்களோட ஆத்மாவை பார்க்க முடியாதது போலவே!
பிரசங்கத்தை கேட்டுக்கொண்டு இருந்தவர்களில ஒத்தர் கேட்டார்: பின்னே எப்படி கடவுளை கண்டு பிடிக்கறது?
படைப்பை பார்ப்பதால, ஆராய்வதால இல்லை!
ம்ம்ம்? அப்ப எப்படி பார்க்கணும்?
சூரியன் சாய்கிற அழகை பார்க்கப்போறீங்க. என்னத்தை பார்ப்பீங்க? அதே மலை, மரம், செடி கொடிகள், நதி, சூரியன்.... பார்த்துகிட்டே இருக்கும் போதுதான் தோணுது அழகு பார்க்கிற விதத்தில
இருக்கு; வெறும் சூரியன், மலை, செடி, கொடிகளில இல்லைன்னு! அது போலத்தான் கடவுளை ஒரு பொருளா தேடினா கிடைக்கமாட்டார். அதுக்கு கள்ளம் கபடில்லாத குழந்தை முன் கூட்டியே நிர்ணயிச்ச நம்பிக்கை, கோட்பாடுன்னு குழம்பாம பார்க்கிறது போல ஒரு பார்வை வேணும்!
No comments:
Post a Comment