மரத்தின்
மேலிருந்த குரங்கு அந்த
ஸுஃபியின் தலையை குறி வைத்து
தேங்காயை எறிந்தது.
அவர்
அதை எடுத்தார். அதில்
ஓட்டை போட்டு இளநீரை குடித்தார்.
பிறகு அதை
உடைத்தார். உள்ளே
இருந்த தேங்காய் வழுக்கையை
தின்றார். நாரை
கயிறாக திரித்துக்கொண்டார்.
ஓட்டை கல்லில்
தேய்த்து கிண்ணங்கள்
ஆக்கிக்கொண்டார். கிளம்பி
போய்விட்டார்.
என்னை
விமரிசனம் செய்ததற்கு நன்றி.
2 comments:
உபயோகிக்கத்தெரிந்தவர்!
எல்லோருக்கும் இப்படி ஒரு மனம் வாய்த்தால்!
Post a Comment