ஒரு
கச்சேரியில் கேட்டது:
“ஆஹா!
என்ன ஒரு
பாடகர். அவரோட
பாட்டு அரங்கத்தை நிரப்பிவிட்டது.”
“ஆமாம்.
அது
நிரப்பினதால நிறைய பேர் வெளியே
போய் அதுக்கு இடம் கொடுக்க
வேண்டி இருந்தது"
ஆன்மீக
கலந்துரையாடலில் கேட்டது:
சாத்திரங்கள்
சொல்கிறபடி நான் எப்படி கடவுளை
நேசிப்பது? என்
முழு இதயத்தையும் அவருக்கு
கொடுப்பது?”
“அதற்கு
முதலில் நீ படைக்கப்பட்ட
விஷயங்களை உன் இதயத்தில்
இருந்து நீக்க வேண்டும்.”
தவறான
வழி காட்டுதல்! நீ
நேசிக்கும் படைக்கப்பட்டவற்றை
நீக்க வேண்டிய அவசியமில்லை.
பாடல்
அரங்கத்தை நிறைத்ததைவிட
கடவுளிடமான அன்பு அதிக இடத்தை
எடுத்துக்கொள்ளாது.
அன்பு
ரொட்டித்துண்டு மாதிரி இல்லை.
உனக்கு
கொஞ்சம் கொடுத்துவிட்டதால்
மற்றவர்களுக்கு கொடுக்க அது
ஒன்றும் குறைந்து போகாது.
நான் முழுவதுமாக
கடவுளை பெற்றுக்கொள்கிறேன்.
அடுத்தவரும்
முழுமையாக. அடுத்தவரும்.
நீ
உன் அன்னையை வெகுவாக நேசிக்கலாம்.
அதே சமயம்
உன் மனைவியை; உன்
குழந்தைகளை. ஒவ்வொருவருமே
அதனால் பயன்பெறுகிறார்கள்.
அடுத்து
அடுத்து கொடுக்கப்படும்போது
அன்பின் தன்மை இன்னும்
அதிகமாகிறது.
உன்
நண்பன் உனக்கு மட்டும் தன்
இதயத்தை தருவானாகில் அவனுக்கு
புத்திமதி சொல்;மற்றவர்களுக்கும்
கொடுக்கச்சொல். இல்லையானால்
அது மிகவும் பலகீனமான இதயமாக
இருக்கும்!
No comments:
Post a Comment