Pages

Thursday, October 31, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 6




2 வது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சுரேஷ்வர்
பூர்வாஶ்ரம பெயர்: மண்டண மிஶ்ரர்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஹிம மித்ரா. கஷ்மீர தேசத்தின் அரசனின் இராஜகுருவாக பணியாற்றிய கன்னியாகுப்ஜ பிராமணர்.
காஞ்சி காமகோடி பீடத்தின் பாதுகாவலராக இருந்த வருடங்கள்: 70
குறிப்பு: ஶ்ரீ சுரேஷ்வரா எந்த ஒரு பீடத்தின் பீடாதிபதியும் அல்ல, ஆனால் ஶ்ரீ ஶங்கரரால் நியமிக்கப்பட்டார். பொதுவாக ஶங்கராச்சாரிய பீடங்களின் செயல்பாட்டை மேற்பார்வை செய்தல் என்னும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. எனினும், காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி மிகவும் இளையவராக (10 வயதுக்கும் குறைவாக) இருந்ததால் அந்த பீடத்துக்கான சிறப்பு பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. ஶ்ரீ ஶங்கரர் தனது உடலை விட்டுவிட்டு சென்ற பின் ஶ்ரீ சுரேஷ்வரரும் அதே போல செல்லும் வரையான காலம் ஶ்ரீ சுரேஷ்வரரின் காலமாக நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
சித்தி: 2695 பவ ஜேஷ்ட சுக்ல த்வாதசி (பொ..மு 407- மே 17) இரவில்
சித்தி அடைந்த இடம்: காஞ்சிபுரத்தில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரம்.
No photo description available.
வேறு:
பூர்வாஶ்ரமத்தில் இவர் கர்ம அனுஷ்டானம்தான் மோக்ஷத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பிய ஒரு மிகப்பெரிய மீமாம்சகர். இவ்விதத்தில் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட பரமாத்மா மீது முற்றிலும் கவனம் செலுத்துவதற்காக உலக பந்தங்களையும் மற்றும் குடும்பகடமைகளை மீறுவதையும் அடங்கிய சன்னியாசத்தை அவர் நிராகரித்தார்.
இருப்பினும், இதே தலைப்பில் ஒரு அறிவார்ந்த விவாதத்தில் ஶ்ரீ ஶங்கரரிடம் தோறுப்போன பின் அவர் சன்னியாசத்தை ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாக ஶ்ரீ ஶங்கரரின் மற்ற சீடர்களால் அத்வைதத்திற்கு முற்றிலும் அர்ப்பணம் செய்யாதவராக சொல்லப்பட்டார். இந்த தவறான கருத்தை அவர் ஶ்ரீ ஶங்கராச்சாரியார் மீதான தனது ஆழ்ந்த பக்தியால் நீக்கினார். ஆதாரமாக ஶ்ரீ ஷங்கரரின் பாஷ்யங்களுக்கு வார்திகம், நைஷ்கர்ம்ய சித்தி போன்ற பல்வேறு படைப்புகளை இயற்றினார்.
அவர் ஒரு பெரிய யோகீஶ்வரராகவும், ஶ்ரீ ஶங்கராச்சார்ய பரம்பரையில் பல இளைய / பின் நாளைய ஆச்சார்யர்களுக்கு ஆசிரியராகவும் இருந்தார். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அவரது சிறந்த நிர்வாக திறமை, உலக அறிவு காரணமாக ஶ்ரீ ஶங்கரரால் நிறுவப்பட்ட அனைத்து ஆச்சார்ய பீடங்களின் செயல்பாட்டையும் மேற்பார்வை செய்ய அவர் நியமிக்கப்பட்டார்.
காஞ்சிபுரத்தின் புனிதப் பகுதியான புண்யரசா என்ற இடத்தில், லயா யோகத்தின் உன்னத நிலை மூலம் ஶிவ லிங்கமாக தன் உடலை மாற்றிக்கொண்டு அவரது உலக வாழ்வை நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் மண்டனமிஸ்ர அக்ரஹாரம் என்று அவரது பூர்வாஶ்ரம பெயரை ஒட்டி அறியப்படுகிறது.

No comments: