Pages

Thursday, October 31, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 7




3 வது ஆச்சார்யரின் விவரங்கள்:

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சர்வக்ஞாத்மேந்திர ஸரஸ்வதி
அடைமொழிகள்: சர்வக்ஞாத்ம முனி, சர்வக்ஞ சந்திரர்
பிறப்பிடம்: திருநெல்வேலிக்கு அருகாமையில் தாம்ரபரணி நதிக் கரையிலுள்ள பிரம்மதேசம் என்னும் ஒரு கிராமம்
பூர்வாஶ்ரம பெயர்: மகாதேவர்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: வர்தனர்
சன்னியாசம்: 7 வயதில்
பீடாதிபதியாக: 70 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாளராக ஆட்சி செய்த ஶ்ரீ ஸுரேஶ்வரரின் சித்திக்கு பிறகு 42 ஆண்டுகள்; மொத்தம் 112
சித்தி: 2737 நள வைஶாக கிருஷ்ண சதுர்தசி (பொ.யு. 365-ஏப்-20)
சித்தி அடைந்த இடம்: வேதாசலம் (திருக்கழுக்குன்றம்)

No photo description available.

பிற:
ஶ்ரீ ஶங்கரர் காஞ்சிபுரத்தில் சர்வக்ஞ பீடத்தில் ஏறவிருந்த போது அவர் "சர்வக்ஞர்" (அனைத்தும் தெரிந்தவர்) என அங்கீகரிக்கப்படுவதற்கு நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் பல அறிஞர்கள் வாதம் புரிய அழைத்தனர். ஶ்ரீ ஶங்கரர் அவரது ஞானத்தை நிரூபித்தார், எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். பின்னர் அவர் சிம்மாசனத்தில் ஏறமுற்பட்டபோது, அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்த சர்வக்ஞாத்மர் ஆச்சார்யரை வாதம் புரிய அழைத்தார், மூன்று நாட்களுக்கு அவர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். நான்காவது நாளில், ஆச்சார்யரின் பதில்களை அவர் ஏற்றுக்கொண்டு மௌனமாக இருந்தார், அதன்பிறகு ஆச்சார்யரின் சர்வக்ஞ பீடத்தில் ஏறினார்.
ஶ்ரீ ஶங்கரருக்கு அத்தகைய ஒரு மேதாவியான இளம் குழந்தையைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவரைப் பற்றி குழந்தையின் தந்தையிடம் கேட்டார். 6 வயதிலிருந்து, அவரது மகன் தண்ணீரை மட்டுமே உட்கொள்வதாகவும், அவனுடன் என்ன பேசினாலும் பிரணவத்தைத்தவிர வேறு ஒன்றும் பதில் பேசமாட்டான் என்று தந்தை சொன்னார். சர்வக்ஞ பீடத்துக்கு இந்த குழந்தையை பொருத்தமான வாரிசாக நியமிக்க முடிவு செய்தார் ஆச்சார்யர். தந்தையின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டபின், சர்வக்ஞாத்மேந்திர ஸரஸ்வதி என்ற பெயரை இட்டு குழந்தைக்கு சன்னியாசத்தை வழங்கினார். ஶ்ரீ சுரேஶ்வரரின் வழிகாட்டுதலின் கீழ் அவருக்கு அடுத்த வாரிசாக அவரை நியமித்தார்.
நீரை தவிர எதையும் உட்கொள்வதில்லை என்ற விரதத்தை தொடர்ந்தார் இந்த ஆச்சார்யர். அவர் சம்க்ஷேப சாரீரகம் போன்ற அத்வைத படைப்புகளை இயற்றினார். அவரது காலத்தில், ஜைனர்கள் (இன்று போல மிகவும் அமைதியானவர்கள் அல்ல) ஆச்சார்ய ஶங்கரரால் வாதங்களில் தோற்கடிக்கப்பட்டு வீழ்ச்சி அடைந்து இருந்தவர்கள் மீண்டும் எழுச்சி பெற்று வந்தனர். இந்த ஆச்சார்யர் பிராக்ஜ்யோதிஷா (இன்று அஸ்ஸாமில் காமருபா என அழைக்கப்படுவது) என்னும் இடம் வரை இந்த ஜைனர்கள் வேத தர்மத்துக்கு தொந்திரவு செய்ய முடியாமல் இருப்பதை உறுதிபடுத்தினார்.

No comments: