ஶ்ரீ ரமண ஶர்மா ஆன்லைன் வலைதளத்தில் இருந்து தமிழாக்கம்.
-----
காமகோடி பீடம்
ஶ்ரீ ஆதி ஶங்கரரின் காலம் பாரம்பரியமாக பொ.ச.மு. 509-477 வரை நடைபெற்றதாக அறியப்படுகிறது. வரலாற்று புத்தகங்களில் பிரபலமாக அறியப்பட்டு இருப்பதற்கு மாறாக இது இருந்தாலும், பாரம்பரிய ஆதாரங்களுக்கு சரியான முக்கியத்துவத்தை கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அறிஞர்கள் (பக்கத்தின் கீழே உள்ள குறிப்புகளைக் காண்க) இது ஶ்ரீ ஆதி ஶங்கரருக்கு முறையான தேதி என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
காஞ்சி காமகோடி ஆச்சார்யரின் பீடம் பொ.ச.மு.482 ஆம் ஆண்டில் ஶ்ரீ ஆதி ஶங்கரரால் நிறுவப்பட்டது. அதன்பிறகு, ஆச்சார்யர்களின் புகழ்பெற்ற சிஷ்ய பரம்பரை உள்ளது, அவர்களை குறித்து பல வரலாற்று விவரங்கள் மடத்தில் உள்ள பதிவுகளில் காணப்படுகின்றன. இப்போதைக்கு நான் வேறு ஒரு சந்தர்ப்பத்திற்காக தயாரிக்கப்பட்டிருந்த விவரங்களின் ஒரு கலவையாக இந்த விவரங்களை பட்டியலிடுகிறேன். நான் இதே விஷயங்கள் குறித்து பின்னால் ஒரு மிக சிறந்த விரிவான வலைப்பக்கம் / தளத்தில் வழங்க முடியும் என நம்புகிறேன். இங்கே பதிவேற்றியுள்ள ஒரு சில PDF கோப்புகளை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நல்லது எது, எது நல்லது இல்லை; எது எது சரி, எது எது சரியில்லை என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆச்சார்யர்கள் நமக்கு மனதில் தூய்மையையும் விவேகத்தையும் தந்து அருள் புரியட்டும். வந்தே குரு பரம்பராம்.
காமகோடி ஆச்சார்யர்கள் சரித்திரத்தின் ஆதாரங்களின் மீது ஒரு கண்ணோட்டம்:
இங்கு வழங்கப்பட்டுள்ள காமகோடி ஆச்சார்யர்களின் வரலாற்று விவரங்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அண்மைக்கால ஆச்சார்யர்களின் விவரங்கள் மடத்தின் பல்வேறு பதிவுகள் மற்றும் மடத்தின் பாரம்பரிய கணக்குகளிலிருந்து கிடைக்கின்றன, முந்தைய ஆச்சார்யர்களின் விவரங்கள் மூன்று முக்கியமான உரை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை புண்ய ஸ்லோக மஞ்ஜரி, குரு ரத்னா மாலா மற்றும் அதன் விரிவுரை சுஷமா.
புண்ய ஸ்லோக மஞ்சரி:
இந்த தொகுப்பு நூல் என்பது பல்வேறு ஆச்சார்யர்களைப் பற்றி பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட வசனங்களின் தொகுப்பாகும். இது பீடத்தின் 56 வது ஆச்சார்யரான ஶ்ரீ ஸதாஶிவ போதேந்திர ஸரஸ்வதி அவர்களால் தொகுக்கப்பட்டது. அவர் ஆரம்பத்திலேயே மற்றவர்கள் (பழைய ஆச்சார்யர்கள் குறித்து) புனைந்த பாடல்களும் சமீபத்திய ஆசார்யர்கள் குறித்து தாம் புனைந்த சில புதிய பாடல்களும், வேறு மூலங்களில் இருந்து தாம் சேகரிக்க முடிந்த விவரங்களும் அடங்கிய தொகுப்பு என்று தெளிவு படுத்திவிடுகிறார்.
இந்த புண்ய ஸ்லோக மஞ்சரி ஒவ்வொரு ஆச்சார்யருக்கும் இவற்றை குறிக்கிறது: யார் எவ்வளவு வருடங்கள் பீடாதிபதியாக இருந்தார், எந்த வருடத்தில் எந்த திதியில் சித்தி அடைந்தார்.(அதாவது அவர்களின் ஆராதனை திதி). அவர்களின் பெயர், அவர்களின் தந்தையின் / பெற்றோர் பெயர், போன்ற அவர்களது பூர்வாஶ்ரம (சன்னியாசத்திற்கு முந்தைய வாழ்க்கை) பற்றிய விவரங்களையும் கிடைத்த அளவில் இது வழங்குகிறது.
No comments:
Post a Comment