நாம
சர்ச்சையை தவிர்த்தாலும்
சர்ச்சை நம்மை விடாது போலிருக்கு!
வாட்சாப்ல
ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சுதா,
இன்னொருத்தர்
இதை தீவிரமா ஆராய்ஞ்சு தப்பு
ரைட்டு கண்டு பிடிக்கறேன்னு
இறங்கி இருக்கார். செய்யி,
பகவான்
எதையும் காரண காரியம் இல்லாம
கிளப்பறது இல்லேன்னேன்.
இதனால
சில விஷயங்கள் தெளிவாகறது.
இன்னும்
பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை.
ஆனாலும்
கொஞ்சம் கொஞ்சம் குழப்பாம
பகிர்ந்துக்கலாம்ன்னு….
என்ன செய்யறது?
உங்க கஷ்டகாலம்!
முதல்ல
சாஸ்த்ரோக்த ஹோமம் எல்லாம்
எது? க்ருஹ்ய
சூத்திரங்களில சொல்லப்பட்டது
குறிச்சு யாரும் ஆட்சேபனை
எழுப்ப முடியாது. பும்சவனம்,
ஜாதகர்மா,
லௌகிகாக்நில
செஞ்சாலும் செளளம்,
உபநயனம்,
வேத வ்ரதம்,
விவாஹம்,
உபாகர்மா
இவற்றை ஒட்டிய ஹோமங்கள்.
பாக
யக்ஞங்கள் -
அஷ்டகா,
ஸ்தாலீபாகம்,
பார்வணம்,
ஆக்ரஹாயணீ,
சைத்ரீ,
ஆச்வயுஜீ
ஆகியன.
சோம
யாகங்களும் ஹவிர் யாகங்களும்
ஸ்ரௌத்தம் ஆகிவிட்டன.
சாதா ஹோமங்களில்
சேரா.
பாபங்களை
தொலைக்க சொல்லப்பட்டது
கூஶ்மாண்ட ஹோமம்.
நூதன
க்ருஹ பிரவேசத்துக்கு ஹோமம்
சொல்லி இருக்கிறது.
ஒவ்வொருவரும்
சாதாரணமாக அவரவர் க்ருஹ்ய
சூத்திரத்தில் ரிஷி சொல்லி
இருப்பதையே அனுசரிக்க வேண்டும்.
தேவையானால்
தன் ரிஷி வேறு விதமாக சொல்லாத
பட்சத்தில் மற்ற ரிஷிகள்
சொல்லியதை செய்யலாம்.
இப்படித்தான்
போதாயனர் பலதை சொல்லி இருக்கிறார்.
நவக்ரஹஹோமம்,
ஆயுஷ் ஹோமம்
போன்றவை இதில் அடக்கம்.
இவற்றை
செய்யலாம்; தவறில்லை.
இதெல்லாம்
இல்லாமல் வியாசர் இயற்றிய
புராணங்களில் பலது சொல்லப்பட்டுள்ளன.
வியாசர்
ரிஷி இல்லை என்று யாரும் சொல்ல
மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அப்படி
நினைத்தால் ஒன்றும் செய்ய
முடியாது.
இவற்றை
செய்வதற்கும் இடம் இருக்கிறது.
ஆரம்பத்தில்
சொல்லப்பட்டவற்றை அவசியம்
செய்ய வேண்டும்; ஆனால்
அவற்றை செய்வார் அருகிவிட்டனர்.
தேவையானால்
செய்யலாம் என்பதில் பலத்தை
செய்ய பலரும் தயாராக உள்ளனர்!
தேவைகள்
அதிகமாகிவிட்டன போலும்!
டிவி சானல்களில்
புதுசு புதுசா சொல்லப்படுகிற
பலதும் இப்படி புராணங்களில்
இருக்கும் போலிருக்கு!
தேவி
பாகவதத்தில் நாலு பக்கத்துக்கு
காயத்ரி ஹோமம் பத்தி சொல்லி
இருக்கார். நாராயணன்
நாரதருக்கு சொன்னதா பதினோராவது
ஸ்கந்தத்தில இருபத்தி நாலாம்
அத்தியாயத்தில வரது.
நண்பர்
அனுப்பின தமிழ் பக்கங்களில
முக்கியமான ஒண்ணு காணோம்!
"இது போலவே
சாந்தியாதி கிருத்யங்களை
சொல்லி அருளனும்" ன்னு
நாரதர் கேட்கறதா வரது.
சம்ஸ்க்ருத
மூலத்தை பாத்தா காயத்ரியை
பயன்படுத்தின சாந்தி பிரயோகம்ன்னு
இருக்கு!
நாலு
பக்கத்துக்கு பிரயோகங்கள்
சொல்லப்பட்டு இருக்கு.
பல வித
சமித்துகள், ஹோம
த்ரவ்யங்கள். ஒவ்வொண்ணுத்துக்கும்
ஒரு வித பலன்.
No comments:
Post a Comment