ஔபாசனம்
பற்றி சில கேள்விகள் வந்துள்ளன.
ஒருவர்
ஔபாசனம் ஆரம்பிக்கவே இல்லை
பிற்காலத்தில் ஆரம்பிக்கலாமா?
விடை
ஆரம்பிக்கலாம்.
நமக்குத்தெரியாமலே
பல சமயம் இது நடக்கிறது.
அதாவது
ஏதோ ஒரு காலகட்டத்தில் ச்ராத்தம்
செய்ய வேண்டி வரும்.
அப்போது
ச்ராத்தம் செய்வது ஔபாசன
அக்னியில்தான்.
எப்போதுமே
விட்டுபோன ஔபாசன அக்னியை
உண்டாக்கிக்கொள்கிறேன்னு
சங்கல்பம் செய்து உண்டாக்கி,
விட்டுபோனதுக்காக
அரிசியும் பணமும் கொடுத்து
முந்தைய சாயங்கால ஔபாசனமும்
இன்றைய காலை ஔபாசனமும்
செய்துதான் மேலே ச்ராத்த
காரியமே ஆரம்பிக்கிறது.
பலரும்
இதுவு ம் ச்ராத்தத்தின் ஒரு
பகுதின்னு நினைக்கிறார்களே
தவிர ஔபாசன அக்னியை உண்டாக்கி
இருக்கிறோம் என்று நினைப்பதேயில்லை.
வாத்தியாரும்
சொல்வதில்லை.
ச்ராத்தத்துக்கு
மொத்தம் இவ்வளவு என்று முடிவு
ஆகிவிடுவதால் அதைப்பற்றி
பேச்சு எழாது.
உண்மையில்
விட்டுப்போன அத்தனை வேளைக்குமான
அரிசியா கொடுக்கிறோம்?
நிச்சயம்
இல்லை. //ஒரு
வருஷத்துக்கு 60
படி அரிசி,
3 படி நெய்
என்று காத்யாயனர் கணக்கு
சொல்கிறார்.//
ந்னு
பார்த்தோம் இல்லையா?நாமும்
கொடுப்பதாக சொல்கிறோம்;
அவரும்
வாங்கிக்கொண்டதாக சொல்கிறார்.
அடுத்து
ச்ரத்தையுடன் செய்யவேண்டிய
ச்ராத்தத்தில் இப்படி செய்வதுமே
தப்புத்தான்.
ஒருவர்
விவாஹம் முடிந்ததுமே அந்த
விவாஹ அக்னியில் தொடர்ந்து
ஔபாசனம் செய்து வர வேண்டும்.
கீதா
அக்காவுக்கு அந்த அக்னியை
ஊருக்கு எடுத்துப்போனது
நினைவிருக்கும்.
எனக்கு
அதற்கு தக்குடு அடித்த கமெண்டுமே
கூட நினைவிருக்கு!
வீட்டுக்கு
எடுத்துவந்து செய்யும் ஹோமம்
ஆக்னேய ஸ்தாலீபாகம்.
(இதுல சில
வேரியேஷன்ஸ் இருக்கு.
இப்ப
சாய்ஸ்ல விட்டுடலாம்.)
இரண்டு
பக்ஷம் இப்படி செய்த பிறகு
விட்டுவிட்டாலும் 12
நாள் வரை
ப்ராயச்சித்தம் செய்து
துவக்கலாம்.
அதற்கு
மேல மீண்டும் உற்பத்தி செய்து
துவக்கலாம்.
இரண்டும்
வெவ்வேறு படிகள்.
ஐந்து
வருஷம் செய்யாமலே விட்டுவிட்டால்?
புனர்
விவாஹம்ன்னு சொல்லி இருக்கு!
அதாவது
திருப்பி கல்யாணம் செஞ்சுக்கணும்.
(அதே
பெண்ணையா?
எனக்கு
என்ன பைத்தியமான்னு நீங்க
கேட்கிற கேள்வி என் காதில
விழலை!)
இதில
விரிவான திருமணம் போல இல்லாமல்
மந்திரங்களை மட்டும் படனம்
செய்யச்சொல்லி இருக்கு.
எனக்கு
அப்படித்தான் செய்து வைத்தார்கள்!
சரி
ச்ராத்தத்துக்கு மீண்டும்
ஔபாசனம் அக்னியை உண்டாக்கிக்கொண்டோம்ன்னு
பார்த்தோம்.
இந்த
அக்னியிலேயேதான் அரிசி களைந்து
வைத்து சமைத்து ஹவிஸ் (அன்னம்) பக்குவம்
செய்ய வேண்டும்.
யாரும்
அதற்கான அவகாசம் -ஒரு
20 நிமிடங்கள்
ஆகலாம் - தர
தயாராக இல்லை என்கிறதால்
லௌகிகாக்னியில் சமைத்ததை
இந்த ஔபாசன அக்னியில் கா ட்டி
எடுக்கிறார்கள்.
(சிலர்
அதுவும் கூட செய்வதில்லை!)
இதுவே
நடைமுறையில் இருக்கு.இதுவும்
சிலாக்கியமில்லை.
No comments:
Post a Comment