Pages

Wednesday, March 14, 2018

அந்தணர் ஆசாரம் - 24 - தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள்





12 நாழிகைக்கு மேல் மாத்யாஹ்ணிக ஸ்னானம் செய்ய வேண்டும். பின் மாத்யாஹ்ணிகம் செய்ய வேண்டும். இயன்ற அளவு காயத்ரி ஜபித்து பின் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலரும் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் ப்ரஹ்ம யக்ஞத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இது மாத்யாஹ்ணிகத்துக்கு பின் மட்டுமே செய்யப்படுவது. ப்ரஹ்ம யக்ஞம் முன் சொன்னது போல் முதல் பாகத்தில் செய்யப்படுவது. அந்த காலத்தில் சொல்லவில்லையானால் இப்போதாவது சொல்ல வேண்டும்.
வ்யாஸர் சொல்லியபடி பிரணவத்துடன் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களை நாமா சொல்லி தர்ப்பயாமி என்றூ தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவர்களையும் ப்ரஹ்ம ரிஷிகளையும் அக்‌ஷதையுடன் கூடிய ஜலத்தாலும் பித்ருக்களை எள் கலந்த ஜலத்தாலும் உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தேவர்களுக்கு பூணூலை உபவீதமாக தரித்து ஒரு முறையும், நிவீதியாக ( மாலைபோல) தரித்து ரிஷிகளுக்கு இரு முறையும், இடமாக தரித்து பித்ருக்களுக்கு மும் முறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலரும் தாய் தந்தையர் உயிருடன் இருந்தால் இந்த பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியதில்லை/ கூடாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இங்கே உத்தேசித்து தர்ப்பணம் கொடுக்கப்படுவோர் வருடாந்திர ச்ராத்தத்தில் வரும் வஸு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் இல்லை. இவர்கள் ஸோமன், யமன், அக்னி என பித்ரு தேவதைகள். மந்திரங்களை கூர்ந்து கவனித்தால் இது புலப்படும். ஆகவே அனைவருமே பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதே போல பூணூலை பிடித்துக்கொண்டு தர்ப்பணம் செய்வது எப்படியோ வழக்கில் இருக்கிறது. இதற்கு ப்ரமாணமும் காணப்படவில்லை. நிவீதி பற்றி விளக்கும் இடத்தில்
मानुषेष्वंसयोः सक्तं मैथुने पृष्ठभागिकम्। तर्पणेऽङ्गुष्ठयोः सक्तं निवीतं त्रिविधं स्मृतम्॥
நிவீதம் மூன்று விதம். சாதாரண மநுஷ்ய கார்யங்களில் இரண்டு தோள்களிலும்
(
சமமாக/முன்புறம் தொங்கி) இருப்பது. ஸ்த்ரீ ஸங்கத்தில் பின் புறம்
தொங்குவது. (ருஷி) தர்ப்பணம் போது (நதியில்) இரண்டு கட்டைவிரல்களிலும்
மாட்டிக்கொண்டிருப்பது.
என்று சொல்லி இருப்பதால் ரிஷி தர்ப்பணத்துக்கு மட்டுமே ஆதாரம் காணப்படுகிறது.

No comments: