காலப்போக்கில்
வைதிகர்கள் இந்த இரண்டையும்
விட்டுவிட்டனர். ..
ஆரம்ப
காலங்களில் சொந்த ஊரிலேயேத்தான்
காரியம் இருக்கும்.
அல்லது
பக்கத்து ஊராக இருக்கும்.
தூரத்து
ஊரானால் முன்னேயே சென்று
தங்கிவிடுவார்கள்.
கர்மாக்களுக்கு
சங்கவ காலமே உசிதமானது.
எப்படியும்
சூரியோதயம் ஆகாமல் ஹோமங்கள்
செய்ய மாட்டார்கள். ஆகவே
தன் நித்திய கர்மாக்களை
முடித்து பின் மற்றவர்களுக்கு
ஹோமங்கள் செய்யப்போவார்கள்.
இப்போது
காலம் மாறிவிட்டது.
எப்போதோ
ஹோமம் செய்கிறோம் என்று
செய்யும் ஹோமங்களில் பட்டியலை
பெருக்கிக்கொண்டு போவார்கள்.
ஒரு மஹா கணபதி
ஹோமம், ஆயுஷ்
ஹோமம், ம்ருத்யுஞ்ஜய
ஹோமம், அப்படியே
ஒரு நவக்ரஹ ஹோமம், சுதர்சன
ஹோமம், தன்வந்திரி
ஹோமம் செய்துவிடலாமே என்று
ஜோசியர் சொல்லுவார்.
புதுசா
குளிகனை த்ருப்தி செய்யணும்ன்னு
ரீதியில எதாவது சொல்லாம
இருந்தா போறாதா? இவரும்
தலையாட்டிவிடுவார்.
இவ்வளோ பெரிய
லிஸ்ட்ன்னா எப்ப ஆரம்பிக்கறது
எப்ப முடிக்கறது. ஆபீஸுக்கு
அன்னைக்கு லீவு போடக்கூட
ரெடியா இருக்க மாட்டாங்க.
சென்னை மாதிரி
இடங்களில வைதீகரும் ஒரு
நாளைக்கு ரெண்டு மூணு இடங்களில
வேலை ஒத்துப்பார்.
அப்புறம்
என்ன? காலை
நாலு -அஞ்சு
மணிக்கு ஆரம்பிப்பாங்க.
ஒன்பது
பத்துக்குள்ள ஏறக்கட்டிட்டு
அடுத்த வேலை பார்க்கப்போகணும்.
இப்படி
அவசரம் அவசரமாக செய்வதால்
என்ன நடக்கிறது?
செய்விப்பவருக்கு
பலனும் முழுமையாக கிடைப்பதில்லை.
செய்த
வைதீகருக்கும் பாபம் இன்னும்
அதிகமாக சேருகிறது. காலை
இந்த நேரத்துக்கு ஆரம்பிக்கறவர்
ஔபாசனம் செய்ய முடியுமா?
இல்லை 1008
காயத்ரிதான்
ஜபிக்க முடியுமா? ஒரு
நாள் அவர் போகும் மோட்டார்
பைக் விபத்தில் மாட்டிக்கும்!
இல்லை இது
போல ஏதாவது!
No comments:
Post a Comment