Pages

Wednesday, February 2, 2011

க்ராஹ்ய ஸம்யமத்தால் உண்டாகும் சித்தி:



Patanjali yoga sutra:

स्थूलस्वरूपसूक्ष्मान्वयार्थवत्त्वसंयामाद् भूतजयः ।।44।।

ஸ்தூ²லஸ்வரூபஸூக்ஷ்மாந்வயார்த²வத்த்வஸம்°யாமாத்³ பூ⁴தஜய​: || 44||

ஸ்தூ²ல ஸ்வரூப ஸூக்ஷ்ம அந்வய அர்த²வத்த்வம் = ஸ்தூலம், ஸ்வரூபம், ஸூக்ஷ்மம், அந்வயம், அர்த²வத்த்வம் ஆகிய பஞ்ச பூத சொரூபங்களில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; பூ⁴த ஜய​: பஞ்ச பூதங்களை ஜெயிக்க முடிகிறது.

ஸ்தூலம், ஸ்வரூபம், ஸூக்ஷ்மம், அந்வயம், அர்த²வத்த்வம் ஆகியன பஞ்ச பூதங்களின் ஐந்து சொரூபங்கள்.
விசேஷங்களும் ஆகாரம் முதலிய தர்மங்களும் கூடிய பகுக்க முடியாத விஷயம் ஸ்தூலமாகும். விசேஷங்கள் யாவை?
ஏழு ஸ்வரங்கள்; குளிர்ச்சி- சூடு போன்ற ஸ்பர்சங்கள்; கருப்பு, சிவப்பு முதலான நிறங்கள்; இனிப்பு, கசப்பு முதலான சுவைகள்; நல்ல வாசனை, 'நாற்றம்' முதலான வாசனைகள்; இவை அனைத்தும் பெயர், சொரூபம், காரியம் ஆகியவற்றால் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டவை. ஆகையால் இவை விசேஷங்கள் எனப்படும். இவற்றில் ஐந்தும் நிலத்தில் உள்ளன. கந்தம் எனும் ரசத்தை தவிர்த்த அனைத்தும் ஜலத்தில் உள்ளன. கந்தம் ரசம் தவிர்த்த அனைத்தும் நெருப்பிலும், கந்தம் ரசம் ரூபம் தவிர்த்த அனைத்தும் வாயுவில் உள்ளன. ஆகாயத்தில் சப்தம் மட்டும் உள்ளது.
இப்படிப்பட்ட விசேஷங்களும் ஆகாரம் முதலிய தர்மங்களும் கூடியவை ஸ்தூலமாகும்.
இந்த பஞ்ச பூதங்களின் விசேஷங்களும் தர்மங்களும் விரிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன. அவை இங்கு நமக்கு தேவையில்லை.
பஞ்ச பூதங்களின் தன்மாத்திரைகள் ஸூக்ஷ்மமாகும். இதன் பரிமாணம் (மாறிய வடிவமே) பரமாணு.
சத்வ ரஜஸ் தமஸ் குணங்கள் சேர்ந்த ப்ரக்ருதி என்பது பஞ்ச பூதங்களின் 'பிரிக்க முடியாத' அந்வய ரூபம். எல்லா காரியங்களிலும் இந்த குணங்கள் பிரிக்க முடியாமல் சேர்ந்திருப்பதால் இந்த பெயர்.
பஞ்ச பூதங்களில் சுக துக்க ரூபமான புருஷார்த்தம் அர்த்தவத்வம் ஆகும்.
பஞ்சபூதங்களின் இந்த ஐந்து வித ரூபங்களிலும் ஸம்யமம் செய்யும் யோகிக்கு பஞ்ச பூதங்கள் மீது ஆளுமை ஏற்படுகிறது. அவை அவன் சங்கல்பப்படி நடந்துகொள்கின்றன.

No comments: