Pages

Saturday, February 12, 2011

விவேக க்யாதியின் முக்கியமான ஸித்தி:



तद्वैराग्यादपि दोषबीजक्षये कैवल्यम् ।।50।।

தத்³வைராக்³யாத³பி தோ³ஷபீ³ஜக்ஷயே கைவல்யம் || 50||

தத்³வைராக்³யாத³பி= அதன் (விசோகா எனும் ஸித்தி) மீதும் (அதன் காரணமான விவேக க்யாதி மீதும்) வைராக்கியம் ஏற்பட்டால் ; தோ³ஷ பீ³ஜ க்ஷயே = அவித்தைக்கு முதலான க்லேசங்களுக்கு காரணமான ப்ராந்தி சம்ஸ்காரம் விலகி; கைவல்யம் = கைவல்யம் என்னும் சுய சொரூப பிரதிஷ்டை உண்டாகிறது. இது பர வைராக்கிய ஸம்ஸ்கார சேஷா என்ற பூமி (நிலை).
த்வைதம் போய் அத்வைதம் வந்துவிட்டது! மற்ற பொருட்களை நியமனம் செய்வது என்ற நிலை த்வைதமாக இருந்தது. இந்த நிலை மீதும் பற்றின்மை - வைராக்கியம் வர (பர வைராக்கியம்) ப்ராந்தி ஸம்ஸ்காரம் என்னும் மாயை முற்றும் விலகுகிறது.

2 comments:

Geetha Sambasivam said...

இது கொஞ்சம் தேவலை, மத்தது திரும்பப் படிக்கணும்! :(

திவாண்ணா said...

பதஞ்சலி யோக சூத்திரத்தையே திரும்பத் திரும்ப படிக்கணும்! கொஞ்சம் கொஞ்சமா புரியவரும். நல்ல விஷயங்கள் கிடைக்கறது அவ்வளோ சுலபமில்லையே!