सत्त्वपुरुषयोः शुद्धिसाम्ये कैवल्यम् ।।55।।
ஸத்த்வபுருஷயோ: ஶுத்³தி⁴ஸாம்யே கைவல்யம் || 55||
ஸத்த்வ புருஷயோ: = புத்தி தத்துவத்துக்கும் புருஷனுக்கும்; ஶுத்³தி⁴ ஸாம்யே = சுத்தி விஷயத்தில் ஒற்றுமை ஏற்பட்டால்; கைவல்யம் = கைவல்யம் கிடைக்கிறது.
புத்தி தத்துவத்துக்கு தோஷங்கள் ரஜஸும் தமஸும். இவை இரண்டும் விலகி விவேக க்யாதியின் பலத்தால் எல்லா விருத்திகளும் நின்று போகும். பிரதி பிம்ப பலத்தால் கற்பிக்கப்பட்ட போகம் இல்லாது போகும். இதுவே புத்தி தத்துவத்தின் சுத்தி.
தோஷம் ஏதும் இல்லா புருஷனுக்கு பிரதி பிம்ப பலத்தால் கல்பிக்கப்பட்ட போகம் போகிறதே புருஷனுக்கு சுத்தி ஆகும். இப்படி சுத்தி ஏற்படுதலே கைவல்யம் என்ற மோக்ஷம் உண்டாகிறது. இது வரை உண்டாகாத துன்பம் இனியும் உண்டாகாது இருக்குமானால் அது கைவல்யம் எனப்படும். இது புத்தி சத்வத்தில் இருந்து முற்றும் வேறு பட்ட புருஷனை சாக்ஷாத்கரிப்பதால் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற சித்திகள் யோக சாத்திர சாதன அனுஷ்டானத்தில் ஒரு சிரத்தை உண்டாகவே சொல்லப்பட்டன.
--ஓம்--
6 comments:
புத்தி மறைந்து போகணுமா??
புத்தி தத்துவம் சுத்தி அடைதல் என்றால்???//
இங்கே கொஞ்சம் புரியவில்லையே? :((((
நிர்குண பிரம்மம்??? எந்தவிதமான குணங்களும் இல்லாமல் இருப்பானா யோகி??
//புத்தி மறைந்து போகணுமா??//
ஆமாம்.
//புத்தி தத்துவம் சுத்தி அடைதல் என்றால்???////
சொல்லி இருக்கே? *புத்தி தத்துவத்துக்கு தோஷங்கள் ரஜஸும் தமஸும். * இது ரெண்டும் விலகணும்.
//நிர்குண பிரம்மம்??? எந்தவிதமான குணங்களும் இல்லாமல் இருப்பானா யோகி??//
அல்டிமேட் நிலை அதான்.
அப்போ ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டேன்னு சொல்றீங்க. இதான் அறிவும், நம்பிக்கையும் பிரியும் இடமா?? ஒருசந்தேகம் தான், ஏன்னா என்னோட அறிவு என் நம்பிக்கையை உறுதிப் படுத்துகிறது. வெறும் உணர்ச்சிவசமான நம்பிக்கை இல்லை, அறிவு வேறே நம்பிக்கை வேறேனு நினைச்சுப் பார்க்க என்னால் முடியலை! நேரம் இருக்கிறச்சே சொல்லுங்க.
//அப்போ ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டேன்னு சொல்றீங்க.//
ஆமாம்.
// இதான் அறிவும், நம்பிக்கையும் பிரியும் இடமா??//
இல்லையே? ஏன் அப்படி நினைக்கிறீங்க?
அறிவும் அனுபவமும் பிரியறதா வேணா சொல்லலாம்.
Post a Comment