Pages

Friday, February 11, 2011

விவேக க்யாதியின் அவாந்தர ஸித்திகள்:



सत्त्वपुरुषान्यताख्यातिमात्रस्य सर्वभावाधिष्ठातृत्वं सर्वज्ञातृत्वं च ।।49।।

ஸத்த்வபுருஷாந்யதாக்²யாதிமாத்ரஸ்ய ஸர்வபா⁴வாதி⁴ஷ்டா²த்ரு«த்வம்° ஸர்வஜ்ஞாத்ரு«த்வம்° ச || 49||

ஸத்த்வ புருஷ = ப்ரக்ருதி, புருஷன் இவர்களின்; அந்யதா க்²யாதி மாத்ரஸ்ய = பேதத்தை குறித்த ஞான ஆவ்ருத்தியில் [அறிவுத்தேடலில்] மட்டும் (முயற்சியுள்ள யோகிக்கு); ஸர்வ பா⁴வாதி⁴ஷ்டா²த்ரு«த்வம்° = ஸர்வ பாவாதிஷ்டாத்ருதம் என்னும் எல்லா விதமான பொருட்களையும் நியமனம் செய்யும் ஆற்றலும் ; ஸர்வ ஜ்ஞாத்ரு«த்வம்° ச =எல்லா முக்காலங்களிலும் உள்ள வஸ்துகள் குறித்து ஞானமும் (உண்டாகின்றன)

ஸம்யமத்தால் சித்தத்தில் ரஜஸ், தமஸ் ஆகியவற்றை நீக்கிக்கொண்ட யோகி மேலான சித்த சுத்தியை அடைந்தவன். அதனால் வசீகார ஸம்க்ஞை என்ற பர வைராக்கியத்தை அடைந்தவன். இந்த யோகி ப்ரக்ருதி - புருஷ பேத ஞானத்தை மட்டில் பெருக்கிக்கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் யோகி ஈஶ்வரனைபோல சகல விதமான வஸ்துக்களையும் நியமனம் செய்யும் ஆற்றல் படைத்தவனாவான். முக்காலங்களிலும் உள்ள வஸ்துக்களின் விசேஷ ஞானத்தையும் பெறுகிறான். இந்த ஸித்திக்கு விசோகா என்று பெயர்.

No comments: