Pages

Sunday, February 13, 2011

கைவல்லியத்துக்கு ஏற்படக்கூடிய தடைகள்:



स्थान्युपनिमन्त्रणे सङ्गस्मयाकरणं पुनरनिष्ट प्रसङ्गात्।51।।

ஸ்தா²ந்யுபநிமந்த்ரணே ஸங்க³ஸ்மயாகரணம்° புநரநிஷ்ட ப்ரஸங்கா³த்| 51||

ஸ்தா²ந்யுபநிமந்த்ரணே = இந்திரன் முதலான ஸ்தானத்தில் இருப்பவரால் பிரார்த்திக்கப்படினும்; ஸங்க³= ஆசை; ஸ்மய அகரணம்°= கர்வம் ஆகியவற்றை செய்யாதிருத்தல்; புநர் = மீண்டும்; அநிஷ்ட = இஷ்டமில்லாத; ப்ரஸங்கா³த் = சம்சார பந்தம் ஏற்படும் என்ற பயத்தால்; (யோகத்துக்கு ஏற்படும் விக்கினங்களை போக்க இதுவே உபாயம்)

யோகிகள் நால்வகை:
பிரதம கல்பிகன்: இவர் ஸம்யமத்தில் மட்டும் விருத்தியை செய்து வருவார். சித்திகள் கிடையாது (பிரச்சினையே இல்லை!) தேவர்கள் இவரை 'கண்டு கொள்ள' மாட்டார்கள்.

மது பூமிகன்: ஸப்ரக்ஞாத ஸமாதியில் ருதம்பரா, பரஞான அவஸ்தையுடன் மதுமதீ என்ற சித்த பூமியை அடைந்து; பஞ்சபூதங்களையும், இந்திரியங்களையும் ஸாக்ஷாத்கரித்து அவற்றை ஜெயிக்க விரும்பி அவற்றால் மது ப்ரதீகா, விசோகா, ஸம்ஸ்கார சேஷா என்ற மூன்று வித பூமிகளை அடைய விரும்புகிறவன் மது பூமிகன்.

ப்ரக்ஞாத்ஜோதி: ருதம்பரா பிரக்ஞையையும் பூதேந்திரியங்கள் ஜெயத்தையும் அடைந்து தேவர்களும் நெருங்காதபடி விசோகா, ஸம்ஸ்கார சேஷா ஸித்தியையும் சாதிக்க விரும்பி, அதனதன் சாதனத்தில் ஸம்யமம் செய்வதில் முயற்சி செய்கிற யோகி இவர். இவருக்கு இந்திராதி யோகங்கள் கிடைக்காது (அதான் தேவர்கள் நெருங்க முடியாத படிக்குன்னு சொல்லியாச்சே!)

அதிக்ராந்த பாவனீயன்: விசோகா, ஸம்ஸ்கார சேஷா பூமிகளையும் அடைந்து கடைசி சரீரத்தில் உள்ள சித்தத்தின் லயம் என்ற பலனை மட்டும் அடைய காத்து இருப்பவர். இவர் செய்ய வேண்டியன எல்லாம் செய்து முடித்தவர். இவருக்கும் இந்திராதி யோகங்கள் கிடையா!

ஆராய்ந்தால் மது பூமிகன் மட்டுமே இந்திராதி யோகங்கள் பெறுவார். ('இந்திரன் முதலான ஸ்தானத்தில் இருப்பவரால் பிரார்த்திக்கப்படினும்' என்று சொன்னது இவருக்கு மட்டுமே பொருந்துகிறது.) போகங்களில் ஆசை வரின் கீழே விழுவர். கர்வத்தை அடக்காவிடில் செய்ய வேண்டியன எல்லாம் செய்து விட்டேன் என்று நினைப்புண்டாகி மேலே யோக பூமிகள் கிடைக்காமல் போகும். ஆகவே இந்த சூத்திரம் இவரைக்குறித்தே சொல்லப்பட்டது.

3 comments:

Geetha Sambasivam said...

மது பூமிகனை மதுதீபிகன் என்று தப்பாய்க் குறிப்பிட்டிருக்கேன் என நினைக்கிறேன். அந்தப் பின்னூட்டமே வரலையோ?

திவாண்ணா said...

பரவாயில்லை!

திவாண்ணா said...

முதல் பிரதம கல்பிகன் மட்டுமே ஓகே, கொஞ்சம் புரியறாப்போல் இருக்கு, மத்தது சுத்தம்! :( இதை இன்னும் கொஞ்சம் எளிமையாப் புரியறாப் போல் சொல்லி இருக்கலாமோ?? ம்ம்ம்ம்ம்ம்??? முக்கியமா மது தீபிகன்.//
இதோ இருக்கு. அதான் இணையம் செஞ்ச வேலையாச்சே! :P
ஒவ்வொரு டெக்னிகல் வார்த்தையும் என்னனு புரிஞ்சா இது புரிஞ்சுடும். அதுக்கு பழைய பதிவுகளை திருப்பி திருப்பி படிக்கணும். அப்புறமா விளக்கமா எழுத பாக்கிறேன்.