Pages

Thursday, February 3, 2011

பஞ்ச பூதங்கள் மீது யோகியின் வல்லமை:



Patanjali yoga sutra

ततोऽणिमादिप्रादुर्भावः कायसंपत्तद्धर्मानभिघातश्च ।।45।।

ததோ'ணிமாதி³ப்ராது³ர்பா⁴வ​: காயஸம்°பத்தத்³த⁴ர்மாநபி⁴கா⁴தஶ்ச || 45||

தத: = அதனால் (பூத ஜயத்தால்); அணிமாதி³= அணிமா முதலான; ப்ராது³ர் பா⁴வ​: =சித்திகள் கிடைப்பதும்; காய ஸம்°பத் = சரீர சம்பத்தும்; தத்³ த⁴ர்மாந் = அவற்றின் தர்மங்களால்; அபி⁴கா⁴தஶ்ச = பாதிக்கப்படாமையும்;(கிடைக்கின்றன).
அணிமா முதலான சித்திகள்:
அணிமா: அணு அளவான சரீரத்தில் இருத்தல்.
மஹிமா: ஒரு யோசனை, இரண்டு யோசனை, பர்வதம் போல் வியாபித்து இருத்தல்.
க4ரிமா: மிகவும் பளுவாக இருத்தல்.
லஹிமா: பஞ்சு போல் கனமில்லாதிருத்தல்.
ப்ராப்தி: இருந்த இடத்தில் இருந்து எதையும் அடையும் தன்மை. பூமியில் இருந்து கொண்டு சந்திரனை தொடுவது போல.
ப்ராகாம்யம்: கேள்வி ஞானம் உள்ளதிலோ நேரடியாக கண்டதிலோ தன் இச்சைக்கு தடை ஏற்படாமை. நீரில் முழுகுவது போல மண்ணில் மூழ்குவது.
ஈஶித்வம்: நம் உடலை நாம் விரும்புவது போல நகர்த்த அசைக்க முடிகிறதல்லவா? அது போல சகல பௌதிக விஷயங்களையும் தன் விருப்பப்படி அசைக்க முடிகிற தன்மை.
வஶித்வம்: பூத பௌதிக குணங்களை தன் இச்சைப்படி மாற்றுதல். விஷத்தையும் அமிர்தமாக பாவித்து கொடுக்க அது அமிர்தமாகும்.
இவையே எட்டு வித சித்திகள்.
இப்படி சத்திய சங்கல்ப சித்திகள் இருந்தாலும் ஈஶ்வர சங்கல்பத்துக்கு மாறாக செயல் பட முடியாது என்கிறார் நாகோஜி பட்டர். சந்திரனை சூரியனாக்க முடியாது; சூரியனை சந்திரனாக்க முடியாது. ஈஶ்வர சங்கல்பத்துக்கு விரோதமாக செயல் பட முனைந்தால் சித்திகளில் இருந்து நழுவி விடுவான்.
இந்த சித்திகளை பெற்றவர் பஞ்ச பூதங்களின் விரோத தர்மங்களால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அக்னியால் எரிக்கப்படாமல், காற்றினால் அசைக்கப்படாமல், மறைப்பில்லாத ஆகாயத்திலும் மறைதல், கல்லுக்குள்ளும் நுழைதல், எவ்வளவு காலமும் நீரில் வசித்தல் ... இப்படி பலதையும் செய்ய இயலும்.

No comments: