तारकं सर्वविषयं सर्वथाविषयक्रमं चेति विवेकजं ज्ञानम् ।।54।।
தாரகம்° ஸர்வவிஷயம்° ஸர்வதா²விஷயக்ரமம்° சேதி விவேகஜம்° ஜ்ஞாநம் || 54||
தாரகம்° = சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றுவதாகவும்; ஸர்வவிஷயம்° = (ஸ்வரூபத்தால்) எல்லா விஷயங்களையும்; ஸர்வதா² விஷய அக்ரமம்° ச = (பிரகாரத்தால்) விஷயத்தின் வரிசை என்று இல்லாமல் ஒரே நேரத்திலும் (அறிதல்); இதி விவேகஜம்° ஜ்ஞாநம் = க்ஷணம், அதன் கிரமம் இவற்றில் ஸம்யமத்தால் உண்டான விவேகஜ ஞானத்தால் (உண்டாகிறது).
முக்காலங்களிலும் உள்ள எல்லா வஸ்துகளும் அறியப்படுவதால் அவற்றின் தோஷங்களை கவனிக்க முடிகிறது. இதனால் வைராக்கியமும் அதனால் மோக்ஷமும் கிடைக்கிறது. அதனால் இது தாரகம் எனப்படுகிறது.
சமைத்த எல்லா திண்பண்டங்களும் சாப்பிடப்பட்டன என்று சொல்லும் போது எல்லா என்பது ஒவ்வொரு திண்பண்டமும் என குறிக்கிறது. மீதி இல்லாமல் என்று பொருள் இங்கு இல்லை. பாத்திரத்தில் இருந்த எல்லா திண்பண்டங்களும் சாப்பிடப்பட்டன என்று சொல்லும் போது எல்லா என்பது மீதி இல்லாமல் என்று பொருள் தருகிறது. முந்தயது பிரகாரத்தால் எல்லாம். பிந்தயது ஸ்வரூபத்தால் எல்லாம். இப்படி எல்லா விஷயங்களும் என்றும் ஒவ்வொரு விஷயத்தில் முழுமையாக என்றும் குறிப்பிட ஸர்வ விஷயம், ஸர்வதா விஷயம் என சொல்லப்பட்டது.
சரி, மேற்கூறிய சித்திகள் எல்லாம் அடையப்பட்டால்தான் கைவல்யம் கிடைக்குமா? அல்லது அவை அனைத்தும் இல்லாமல் கிடைக்குமா?
4 comments:
கைவல்யம் கிடைக்குமா தெரியாது. ஆனால் தின்பண்ட உதாரணம் நல்லாவே புரிஞ்சது! ஒரு வழியா மண்டையிலே ஏறினது.
ஐ! நல்ல ஐடியாவா இருக்கே!இதே மாதிரி உதாரணங்கள் கொடுக்கலாமா? :-))
ஹிஹிஹி, தீனிப் பண்டாரமுல்ல நாம! :)))))))
ஹிஹிஹி!
Post a Comment