Pages

Tuesday, February 22, 2011

4- கைவல்ய பாதம்



चतुर्थः कैवल्यपादः         சதுர்த²​: கைவல்யபாத³​:

முதல் மூன்று பாதங்களால் ஸமாதி, ஸமாதியின் சாதனங்கள், ஸமாதியின் விபூதி ஆகியன சொல்லப்பட்டன. இனி ஸமாதியால் உண்டாகும் கைவல்ய நிலை குறித்து சொல்லப்படும்.

 जन्मौषधिमन्त्रतपःसमाधिजाः सिद्धयः ।।1।।
ஜந்மௌஷதி⁴மந்த்ரதப​:ஸமாதி⁴ஜா​: ஸித்³த⁴ய​: || 1||

ஜந்ம = பிறவியாலும்; ஔஷதி⁴ = மூலிகைகளாலும்; மந்த்ர = மந்திரங்களாலும்; தப​: = தபஸாலும்; ஸமாதி⁴ = ஸமாதியாலும்; ஜா​: உண்டானவை; ஸித்³த⁴ய = சித்திகள்.

பிறவியிலேயே சிலருக்கு சித்திகள் இருக்கலாம்!
 சில மூலிகைகளை உட்கொள்வதாலும், மருந்து தயார் செய்து உட்கொள்வதாலும் சில சித்திகள் அடையப்படும். இதனால் மூப்பு, நரை இல்லாமல் சிலர் இருப்பர்.
 காற்றில் பறத்தல் போன்ற சில சித்திகள் மந்திர ஜபங்களால் அடையப்படுகின்றன.
 விஸ்வாமித்திரருக்கு தபசால் சித்திகள் உண்டானது. நந்திகேஸ்வரர் மனுஷ உடலில் இருந்து கொண்டே தபஸால் ஈஶ்வர அனுக்ரஹம் ஏற்பட்டு மனித சரீரத்தை தேவ சரீரமாக மாற்றிக்கொண்டார். யோகிகள் ஸம்யமம் செய்து பெறும் சித்திகள் ஸமாதி சித்தி எனப்படும்.


2 comments:

Geetha Sambasivam said...

நந்திகேஸ்வரர் மனுஷ உடலில் இருந்து கொண்டே தபஸால் ஈஶ்வர அனுக்ரஹம் ஏற்பட்டு மனித சரீரத்தை தேவ சரீரமாக மாற்றிக்கொண்டார்//

இது தான் சித்தர்கள் கூறும் காயசாதனம் என்று புரிந்து கொள்ளலாமா?? கிட்டத் தட்ட அவங்களும் இதைத் தானே சொல்றாங்க?? இந்தப் புற மனித உடலை ஒளி பொருந்திய உடம்பாக மாற்றுவது?? இது கொஞ்சம் புரியுது என்றே நினைக்கிறேன். நந்தி தானே சித்தர்களுக்கும் ஆதி குரு!

Geetha Sambasivam said...

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால் எல்லாரும் போய்ச் சேரும் இடம் ஒன்றே, அப்படித் தானே!