நாம் அனாவசியமா கோபப்படுகிறோம் ன்னு புரிஞ்சுக்கிறதே முதல் படி. அதில லாபம் இல்லை, மாறா நஷ்டம்தான் இருக்குன்னு புரியறது இரண்டாம் படி.
இப்பல்லாம் எல்லாத்துக்கும் ஜீன்ஸ் (genes) -மரபணுவை திட்டறது பேஷன். திருட்டு புத்தியா, பாவம் அவன் என்ன பண்ணுவான்? அவன் ஜீன்ஸ் அந்த மாதிரி.... இதை ஒத்துக்கிறாப் போலத்தான் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லறதும்.... ஸ்ரீ வத்ஸ கோத்திரக்காரர்கள் பெரிய கோபக்காரங்களாம். கதை கதையா அப்படி சொல்லியிருக்கு. இவங்களுக்கு பெரிய நண்பன் அக்னியாம். கோபம் இருக்காதா பின்னே? :-)) இன்னும் கௌசிக கோத்திரம் விஸ்வாமித்ர கோத்திரம் சேர்ந்தவங்க எல்லாம் கோபக்காரங்களாம். ஏன்னு கேட்க வேண்டியதில்லை!
அது சரி, அதுக்காக கோத்திரத்தை மாத்த முடியுமா? இல்லை அப்படி மாத்தினாத்தான் கோபம் போகுமா? கோபம் ரிப்லக்ஸ் ன்னு பாத்தோம். அதனால அதை கட்டுப்படுத்தறது கஷ்டம். சரி அப்படின்னா என்ன செய்யலாம்? தயானந்தர் எடுத்த ஒரு வொர்க் ஷாப்பில இத நிறைய விசாரிச்சார்.
கோபம் வருதா? பரவாயில்லை. அது ரிப்லக்ஸ். அதுக்கு நீ ஒண்ணும் செய்ய முடியாது. ஒரே ஒரு விஷயம் கவனத்தில வெச்சுக்கோ. கோபத்தில எதையும் செய்யாதே! (Anger is a reflex. A reflex means you have no control over it. So what to do? Only, dont act in anger) கோபப்படுகிறது ஒரு பக்கம் இருக்க, கோபத்தோட நாம் செய்கிற செயல்கள்தான் நிறைய பிரச்சினைகளை உருவாக்கும்.
பின்ன? கொஞ்ச நேரம் கொடு. ரிப்லக்ஸ் உடனடியா மனசை கிளறிவிடுது. புத்தி கொஞ்சம் மெதுவாத்தான் வேலை செய்யும். அதுக்கு அவகாசம் கொடுத்தாப்போதும். அது எப்படி எதிர்வினை இருக்கணும்ன்னு திட்டம் போட்டு கொடுக்கும். அப்படி செய்யறது அனேகமா சரியாகவே இருக்கும்.
பையன் ஸ்கூல்லேந்து வந்தான். முகம் எல்லாம் வீங்கிப்போய்... சண்டை போட்டு இருக்கான்னு தெரிஞ்சது. அப்பா கேட்டார்.
என்னடா, சண்டை போட்டியா?
ஆமாம்.
ஏன்?
ராமு ப்ரவோக் பண்ணான்.
நான் சொல்லி இருக்கேன் இல்லையா? கோபம் வந்தா பத்து எண்ணனும், அப்புறம்தான் செயல் படணும்ன்னு?
ஆமாம்ப்பா. ஆனா அவன் பத்து எண்ணலையே?
No comments:
Post a Comment