ஜானியெட் என்று ஒரு சாது. பார்க்க பிச்சைக்காரன் போல் இருப்பார். மெக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு போனார். பெரும் பணக்காரர்கள் காத்திருக்க நாவிதர் இந்த பிச்சைகாரனுக்கு முடிவெட்டி விட்டார். கட்டணம் வசூல் செய்யாதது மட்டுமல்லாமல் கொஞ்சம் பைசாவையும் கொடுத்து அனுப்பினார்.
சாதுவுக்கு பரம சந்தோஷம். இன்று என்ன பொருள் கிடைக்கிறதோ அதை அப்படியே இவருக்கு கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஜானியெட்டை தெரிந்த பெரும் பணக்காரர் அன்று அவரை சந்தித்து நிறைய தங்க நாணயங்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்றை வழங்கினார். வெகு சந்தோஷத்துடன் உடனே போய் அதை நாவிதரிடம் கொடுத்தார்.
ஏன் என்று நாவிதரிடம் சொன்ன போது நாவிதர் கத்தினார், “ என்ன மாதிரி சாது நீங்கள்? அன்புடன் செய்த ஒரு செயலுக்கு இப்படி ஒரு வெகுமதி தரப்பார்க்கிறீர்கள்?”
No comments:
Post a Comment