Pages

Friday, December 2, 2011

வினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..

உரத்த சிந்தனையை ஒட்டிய வினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..
 //எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் தரலாம்: இந்த நிலை மனது ஏற்று கொள்ள மன பக்குவம் வேண்டும் .எப்படி மன பக்குவம் வரும் திவா சார்? //

 மனசுக்கும் புத்திக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சஞ்சலம் ஆகிறது மனசு. ஸ்திரமா இருக்கிறது புத்தி. புத்தியால விசாரிச்சு எது வேணுமானா எப்படி வேணுமானா நடக்கும்ன்னு புரிந்த பிறகு மனசு இந்த மாதிரி நிலை வரும் போது ஏத்துக்கும். எதிர்பார்ப்பாலதான் - அது இப்படித்தான் நடக்கனும் என்று நினைக்கறதால்தான்- ப்ரஸ்ட்ரேஷன் வருகிறது.

 // அப்புறம் நாம் என்று நம்மை மற்றவர்கள் நினைப்பதே நமது நடை ,உடை பாவனைகள் மற்றும் நமது எண்ணம் சொல் செயல்கள் தானே திவா சார்? //

 ம்ம்ம்ம் அப்படி இல்லை. நாம்ன்னு மத்தவங்க நினைக்கிறது அவங்களோட இன்டர்ப்ரடேஷன். கவர்ச்சிகரமா உடை அணிகிற ஒத்தரை பார்க்கிறப்ப விகாரமா தோணுவது சரி. சாதாரணமா உடை அணிஞ்சாலும் அப்படி தோணினா? அழகா உடை அணிஞ்சா ஒத்தர் நல்லா இருக்குன்னு நினைக்க்லாம். ஒத்தர் நம்மை கவரத்தான் இப்படின்னு நினைக்கலாம். இன்னொருத்தரை கவரன்னு இன்னொருவர் நினைக்கலாம். அதனால பார்க்கிற பார்வையே முக்கியம்.

 // இதை எப்படி ஒழுங்கு படுத்துவது ?அல்லது எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் ?//
 எண்ணம் சொல் செயல்ன்னு நீங்க சொன்னதால இப்படி பார்க்கலாம். சாதாரணமா எதை எண்ணுகிறோமோ, அதை சொல்லுகிறோமோ, அதை செய்கிறோம் என்கிறாங்க்க. வேதமும் இப்படியே சொல்லுது. யத் மனசா த்யாயதி, தத் வாசா வததி, தத் கர்மணா கரோதி... இது நல்லவங்களைப்பத்தி சொன்னது. நடைமுறையில நிறையவே வித்தியாசம் இருக்கு. எதை நினைக்கிறோமோ அத அப்படி சொல்லறதில்லை. எப்படி சொன்னா எபக்டிவ்வா இருக்கும் யோசிச்சு அப்படி சொல்லறோம். சொன்னதை அப்படியே செய்யறோமா? அதுவும் இல்லை. இந்த இடை வெளியை நீக்கினா நாம உருப்படலாம். அகத்தின் அழகுன்னு சொன்னபடி எப்ப நம்ம மனசு சுத்தமாக இருக்கோ அது நம்மோட நடை உடை பாவனைகளில நல்லாவே வெளிப்படும். பாக்கிறவர் மனசால அது அதிகம் பாதிக்கப்படாது. நல்ல சாதுக்கள் எல்லாரையும் இப்படித்தான் கவருகிறாங்க. மேலே கேளுங்க. யோசிக்கலாம்.

5 comments:

Jayashree said...

the so called "நாம்" "நானே " ஒண்ணு இல்ல மூணு ஆள் !! நடைமுறைல :)))!!

திவாண்ணா said...

விளக்கம் ப்ளீஸ்!

திவாண்ணா said...

நினைக்கிறது ஒன்னு சொல்லறது வேறொண்ணு செய்கிறது இன்னொன்னா? :-)))))

Jayashree said...

ம்.. 1) நான் , நாம் யார்னு பிறத்தியார் நினைப்பில் , (அளவுலோலில்;-) ),2) நான் நாம் யார் நு நம்பளோட நினைப்பில் படி , 3)நான் நாம் யார் உண்மைலேயே ங்கற படி நாமளே 3 பேர் தானே!!:)))

நீங்க சொல்லறபடியும் எடுத்துக்கலாம் . ஆனா எல்லாரும் thought word and deed aligned ஆ இல்லாதவா இல்லையே . அந்த integrity கொஞ்சமாவது இருந்திருக்கலைனா இந்த உலகம் இவ்வளவாவது உருப்பட்டிருக்காது இல்லையா :))))

திவாண்ணா said...

you are absolutely right! when there is an argument my friend used to say there are three sides to this; one- my way, two- your way and three- the right way!