ஜட்ஜ்மென்ட் டே ன்னு சொல்லி கடவுளை கூப்பிட்டாங்க. இவரும் போய் சொர்கத்துல உக்காந்தார். செத்துப்போன எல்லாரும் தீர்ப்புக்கு ரெடி.
கடவுள் ஒரு தேவதையை கூப்பிட்டு பத்து கட்டளைகளையும் ஒவ்வொண்ணா படிக்கச் சொன்னார்.
முதல் கட்டளையை படிச்சதும் இது படி நடந்துக்காதவங்க நரகத்துக்கு போகட்டும் என்றார். அப்படியே ஆயிற்று. அடுத்த கட்டளை படிக்கப்பட்டு அடுத்து இன்னும் பலர் நரகத்துக்கு போயிட்டாங்க. இப்படியே போய் ஏழாவது கட்டளையை படிச்சு முடிக்கிறப்ப சொர்கத்துல ஒரே ஒரு ஆசாமிதான் மிஞ்சினார்.
கடவுள் பாத்தார். ஒரே ஒரு ஆசாமிதான் மிச்சமா? பாவம் தனிமையில கஷ்ட படுவானே!
சரி சரி, போனாப்போறது. எல்லாரையும் மன்னிச்சுடறேன். எல்லாரும் திரும்பி சொர்கத்துக்கு வாங்க ன்னார்.
மிஞ்சின ஆசாமி எழுந்து கத்தினார். இது ரொம்ப மோசம்! இப்படி எல்லாரையும் மன்னிச்சுடுவேன்னு ஏன் முன்னேயே சொல்லலை?
No comments:
Post a Comment