Pages

Friday, September 28, 2012

பஞ்சதஶீ -1-43


பராபராத்மநோரேவம்° யுக்த்யா ஸம்பா⁴விதைகதா |
தத்த்வமஸ்யாதி³வாக்யை​: ஸா பா⁴க³த்யாகே³ந லக்ஷ்யதே || 43||

இப்படி யுக்தியால் ப்ரம்மனையும் ஜீவனையும் என்னவென்று அறியலாம். இந்த அடையாளமே மஹா வாக்கியங்களில் தத்வமஸி முதலான வாக்கியங்களால் உணர்த்தப்படுகின்றன.

Thursday, September 27, 2012

பஞ்சதஶீ - 1 - 42


யதா²முஞ்ஜாதி³ஷீகைவமாத்மா யுக்த்யாஸமுத்³த்⁴ரு«த​: |
 ஶரீரத்ரிதயாத்³தீ⁴ரை​: பரம்° ப்³ரஹ்மைவ ஜாயதே || 42|| 

முஞ்சம் புல்லின் உள்ளிருக்கும் மென்மையான பகுதியை அதன் கடினமான உறையில் இருந்து பிரித்தறிவது போல மூன்று சரீரங்களில் இருந்தும் ஆத்மாவை பிரித்தறியலாம். அப்போது அது பரப்பிரம்மமாக அறியப்படும்.

 

Wednesday, September 26, 2012

பஞ்சதஶீ - 1- 41


ஸுஷுப்த்யபா⁴நே பா⁴நந்து ஸமாதா⁴வாத்மநோ'ந்வய​: |
 வ்யதிரேகஸ்த்வாத்மபா⁴நே ஸுஷுப்த்யநவபா⁴ஸநம் || 41|| 

ஆநந்த சரீரம், காரண சரீரமாக உணரப்படும் அவித்யை ஆழ் த்யானத்தில் காணாமல் போகிறது. அங்கு தான் என்றோ பிறிது என்றோ ஒன்றுமில்லை. அப்போதும் ஆத்மன் இருக்கிறது. 

Tuesday, September 25, 2012

பஞ்சதஶீ 1 - 40


தத்³விவேகாத்³விவிக்தா​: ஸ்யு​: கோஷா​: ப்ராணமநோதி⁴ய​: |
தேஹி தத்ர கு³ணாவஸ்தா²பே⁴த³மாத்ராத்ப்ரு«த²க்க்ரு«தா​: || 40|| 

அதே போல சூக்ஷ்ம சரீரத்தின் - அதன் அன்வயமற்ற தற்காலிக நிலையும் இதன் மனோமய, விஞ்ஞானமய, பிராணமய கோசங்களும் ஆத்மாவில் இருந்து பிரித்தறியப்படுகிறன. 
 

Monday, September 24, 2012

பஞ்சதஶீ - 1 - 39


லிங்க³பா⁴நே ஸுஷுப்தௌ ஸ்யாதா³த்மநோ பா⁴நமந்வய​: |
 வ்யதிரேகஸ்து தத்³பா⁴நே லிங்க³ஸ்யாபா⁴நமுச்யதே || 39|| 

அதே போல ஆழ் உறக்க சுசுப்தியில் சூக்ஷ்ம சரீரம் உணரப்படுவதில்லை; இருந்தாலும் ஆத்மா என்பது அதை அறிகிறது.
 

விநாயக சதுர்த்தி எண்ணங்கள்



விநாயக சதுர்த்தி முடிந்து அனேகமாக எல்லா இடங்களிலும் விசர்ஜனமும் முடிந்திருக்கும். வருஷா வருஷம் சில விஷயங்கள் இந்த சமயத்தில் அடிபடும். நீர்நிலைகள் மாசு படுகிறது என்பதொன்று. விநாயகரை தடியால், காலால் அடித்து/ உதைத்து உடைத்து விசர்ஜனம் செய்கிறார்கள் என்பதொன்று.
என்னதான் அரசு ப்ளாஸ்டர் ஆஃப் பாரீசில் பிள்ளையார் உருவங்களை செய்யாதீர்கள் என்றாலும் நாம் கேட்கிறோமா? என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளைஅது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம்? மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்ன?  எல்லா திருமண மண்டபங்களிலேயும் எக்கச்சக்கமாத்தான் எரியுது. கிடக்கட்டும்.
அடுத்து விநாயகரை உடைக்கிற விஷயம்.
இதுலதான் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்.
உடைக்கிறது விநாயகரையா அல்லது அப்படிப்பட்ட ஒரு உருவத்தையா? நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா? பிள்ளையார் பொம்மை வேணும்ன்னு கேட்டே பார்த்து வாங்குகிறோம். அதுல எப்ப பிள்ளையார் வருவார்? 
நாம் பூஜை செய்ய ப்ராணப்ரதிஷ்டை செய்யும்போது வருவார். அப்படி செய்யும்போது என்ன சொல்கிறோம்? “அப்பா பிள்ளையாரே பூஜை செய்யும் வரை எங்களிடம் ப்ரீதியுடன் இருப்பா” என்கிறோம். பூஜை முடியும் வரை – இது முக்கியம். ப்ராணப்ரதிஷ்டை ன்னு இல்லாட்டாலும் பூஜை கிரமத்துல ஸுமுகம்/ ஸித்திவிநாயகம் அல்லது பிள்ளையாரின் ஏதோ ஒரு பெயரை சொல்லி "த்யாயாமி, ஆவாஹயாமி" என்னும் போது வருவார். அப்படி இல்லைன்னா அந்த டிக்கு அர்த்தமே இல்லையே?
சரி இப்படி ஆரம்பிச்சு பூஜை செய்கிறோம். சாதாரணமா இப்படி மற்ற பூஜைகள் செய்யும்போது பல நாட்கள் வைத்து இருக்க மாட்டோம். அப்படி வைக்கிறதானால் வேளா வேளைக்கு பூஜை செய்யணும். அனாபூஜை முடிந்த உனே அல்து அடுத்நாள்  பூஜை செய்து முடிந்த பிறகு புனர் பூஜை ன்னு செய்து :…. யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. க்‌ஷேமாய புனராகமனாய ச” என்போம். அதாவது “உன்னை உன் இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நலத்தோடு மீண்டும் வருவாய்” என்கிறோம். அதாவது அதன் பின் ப்ரதிஷ்டை செய்த பிம்பத்திலே/ படத்திலே அந்த தெய்வ சக்தி இல்லை. அது சாதாரணமாக எங்கே இருக்குமோ அங்கே அனுப்பி விட்டோம். பிள்ளையார் ஊர்வலங்களிலேயும் நீர் நிலைக்கு போன பின் சூடம் காட்டி அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
எங்கோ எப்படி அனுப்பி முடியும்? பகவான் எங்கேயும் இருக்கிறான்னா…. ஒத்துக்கறேன். பகவான் எங்கேயும் இருக்கிறான் என்பதே என்னோட தத்துவமும். அப்ப நாம இப்படி உதைக்கிறாங்களே ன்னு எல்லாம் வருத்தப்படறதுல நியாயமே இல்லை. உதைப்பதும் அவனே, உதை வாங்குவதும் அவனே, அப்புறம் என்ன? 
ஆக சரியான லெவெல்லேந்து யோசிக்கணும். பகவான் எங்கும் இருக்கிறானா? இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா? அழைத்தால் மட்டும் வருகிறான் னா, போய் வா ன்னு விடை கொடுத்தாலும் போய் விடுவான்தானே?
அப்படி போய் விட்ட பிறகு உடைக்கப்படுவது வெறும் பொம்மை, சிலை. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லை.
இதை பெரும்பாலானவர் ஒத்துக்க கஷ்டப்படுவீங்கன்னு தோணுது. நமக்கு நெருங்கிய ஒத்தர் இறந்து போய்விட்டா… இருக்கிற உடல் வெறும் பஞ்சபூதங்களால ஆனதுதானே? அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா? முறைப்படி அடக்கம் செய்யறது இல்லையா?
இது சரியான கேள்வி. விநாயகரை கொண்டு நீர் நிலையில் கரைப்பதே ஒரு தத்துவத்தை உணர்த்த. மண்ணிலிருந்து வருவது மண்ணாகவே போய் விடுகிறது. பஞ்ச பூதங்களை பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடோ நெருப்போடோ ஐக்கியப்படுத்துகிறோம். அதே போல மண்ணாலான பிள்ளையாரை தெய்வ சக்தியை அனுப்பி விட்ட பின் மண்ணாகவே ஆனதை நீரில் கரைத்து விடுகிறோம்.
அப்ப ஒன்று செய்யலாம். அலங்காரத்துக்காக பெரிய பெரிய பிள்ளையாரை மனசுக்கு இதமா எல்லாரும் கண்டு களிக்க நிறுவி, அதன் அடியில் ஒரு சின்ன மண் பிள்ளையாரை நிறுவலாம். பூஜை எல்லாம் இந்த மண் பிள்ளையாருக்கே செய்ய வேண்டும். ஊர்வலமா எல்லா பிள்ளையாரையும் கொண்டு போகலாம். ஆனால் மண் பிள்ளையாரை கரைத்துவிட்டு பெரிய பிள்ளையாரை அதே வண்டியில் படுக்கப் போட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அங்கே தகுந்தபடி டிஸ்போஸ் செய்து கொள்ளலாம். அல்லது வைக்க இடம் இருந்தால் அவரையே அடுத்த வருஷம் பெய்ண்ட் அடித்து புதுப்பித்து மறு சுழற்சி செய்து விடலாம்.

இந்த வாரம் தோணின கோளாறான எண்ணங்கள். :-))))


Tuesday, September 18, 2012

பஞ்சதஶீ 1-38


அபா⁴நே ஸ்தூ²லதே³ஹஸ்ய ஸ்வப்நே யத்³பா⁴நமாத்மந​: |
ஸோ'ந்வயோ வ்யதிரேகஸ்தத்³பா⁴நே'ந்யாநவபா⁴ஸநம் || 38||

 விழிப்பில் தெரிகிற உடல் முதலான தூல விஷயங்கள் கனவில் தெரிவதில்லை. ஆனால் காண்கின்ற வஸ்துவான ஆத்மா எல்லா நிலைகளிலும் இருக்கிறது . ஆகவே இதுவே எப்போதுமிருக்கிறது. இதுவே அன்வயமானது.

 

Monday, September 17, 2012

உப்பு




உப்பு பற்றி சமீபத்தில் பேச்சு எழுந்தது. உப்புக்கும் ஆன்மீக சமாசாரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. பல விஷயங்களை விசாரிக்கும் போது இது தெரிகிறது. சீரியஸாக பூஜை, ஹோமம் செய்வதானால் காலை விழித்தபின், நீரோ உணவோ ஏதுமில்லாமலே செய்யச்சொல்கிறார்கள். ஒரு வேளை அப்படி ஏதும் அருந்த வேன்டும் என்ற உடல் நிலை இருந்தால், பாலோ கஞ்சியோ குடிக்கலாம். ஆனால் அதில் உப்பு இல்லாமலே இருக்க வேண்டும். (காப்பிக்கு உப்பு போடுவதில்லைதான். ஆனால் கஞ்சி பத்தி சொல்ல வருகிறேன்!)

ஓரிரண்டு நாட்கள் செய்யணும் ஹோமங்கள் இருக்கலாம். சமீபத்தில் சஹஸ்ர சண்டி ப்ரோக்ராம்கள் சில் நடைபெற்றன. அப்படி செய்தால் அத்தனை நாளும் உப்பில்லாமலேதான் சாப்பாடு. 

காரீரேஷ்டி என்று ஒரு இஷ்டி. மழை வேண்டி செய்வது. கருப்பு அரிசி கருப்பு ஆடைகள் அணிந்து செய்வர். சுமார் 3 வாரங்கள் நடக்கும். அதில் பங்கெடுக்கும் அனைவருமே உப்பில்லாமலே அத்தனை நாட்களும் செய்ய வேண்டும். முன் ஒரு முறை இப்படி செய்துவிட்டு ,மழை பெய்யவில்லை என்று காஞ்சி பெரியவரிடம் போய் புகார் செய்தார்கள். அவர் "ஏண்டா, உப்பில்லா பத்தியம் எல்லோரும் இருந்தீங்களோ?" என்று கேட்டார். போனவர்கள் முகம் தொங்கிப்போய்விட்டது.

சித்ரா பௌர்ணமி போல சில விரதங்களும் இதே போலவே உப்பில்லா பத்தியம் அனுசரிக்க வேண்டியன.

ஆக பொதுவாகவே சீரியஸாக செய்கிற கர்மாக்களில உப்பு விலக்கப்பட்டு இருக்கு.
சாப்பாட்டிலேயே வாழை இலை போடுகிறார்களே, அதன் கீழ்- நம் பக்கம் இருக்கும் பாதியில் அன்னம் பாயசம் மாதிரி உப்பில்லாதவற்றையே பரிமாறுவார்கள். நடுவில் இருக்கும் நரம்பு அதை இரண்டா பிரிக்குதாம். மேல் பாதியில உப்புள்ளவற்றை வைக்கிறார்கள். ஏன்னு கேட்டா அன்னத்தை வயித்திலே இருக்கும் அக்னிக்கு ஹோமம் செய்வதாக சொல்கிறாங்க!

க்ளாசிகலாக வைதீகமாக செய்து வரும் ஹோமங்கள் எதிலும் உப்புள்ளவற்றை ஹோமம் செய்யச் சொல்லவில்லை.

ஆனா எங்கே தேடினாலும் ஏன்னு விளக்கம் இல்லை.

உப்பு ராஜஸ குணத்தை தூண்டுகிறது. “ஏண்டா இப்படி கொஞ்சம் கூட ரோஸம் இல்லாம இருக்கியே? உப்பு போட்டு சாப்படறயா இல்லையா?“ ன்னு கேள்வி கூட கேட்பதுண்டு.
இறையை அணுகி செய்ய வேண்டிய காரியங்களில சாத்வீகமே அதிகமாக இருக்கணும். அதனால இப்படி ராஜஸத்தை தூண்டுகிறதை விலக்கச்சொல்லி இருக்கலாம்.
விஷயம் தெரிஞ்சவங்க சொல்லலாம்.

Thursday, September 13, 2012

எல்லோருக்கும் பொதுவான பூஜை முறை






எல்லோருக்கும் பொதுவான பூஜை :

முன்னே பஞ்சாயதன  பூஜையை பார்த்தோம். இப்போது எல்லா தெய்வங்களுக்கும் யாரும் செய்யக்கூடிய பொதுவான பூஜை முறையை பார்க்கலாம்.

1.ஆசமனம். கேசவாய நமஹ, நாராயணாய நமஹ, மாதவாய நமஹ என்று மும்முறை நீரை உள்ளங்கையில் உளுந்து முழுகும் அளவு எடுத்து அருந்தவும்.
மங்களாக்ஷதை + நீர் எடுத்துக்கொண்டு

2.சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம் …………. ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும். -ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ப்ரஸாத3 சித்தயர்த்த2ம்) இஷ்ட காம்யார்த்த2 சித்யர்த்த2ம் …………. ஆராதனம் கரிஷ்யே. (முன்போல உ-ம்: ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ஆராதனம் கரிஷ்யே.) யாவத் சக்தி த்3யான ஆவாஹனாதி ஷோடோபசார பூஜாம் கரிஷ்யே.
அக்ஷதை நீரை கீழே விட்டுவிடவும்.

3.த்3யான ஆவாஹனம்:
ஆக3ச்ச2 தே3வ தே3வேஶ மர்த்யலோக ஹிதேச்ச2யா
பூஜயாமி விதா4னேன ப்ரஸான்னஸுமுகோ2 ப4வ 

4.ஆசனம்:
பாதா3ஸனம் குரு ப்ராஞ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம்
பூ4ஷிதம் விவிதை4ர் ரத்னை: குரு பாதுகாஸனம்
ஆஸனம் சமர்ப்பயாமி

5.பாத்யம்
3ங்காதிப்4: ஸுதீர்தே2ப்4யோ மயா ப்ரார்த்த2னயா ஹ்ருதம்
தோயமே தத் ஸுக2 ஸ்பர்சம் பாத்3யார்த்த2ம் ப்ரதி க்ருஹ்யதாம்.

6.அர்க்யம்
3ந்தோ43கேன புஷ்பேண சந்த3னேன ஸுக3ந்தி4னா
அர்க்4யம் க்ருஹான தே3வேச ப4க்திம் மே அசலாம் குரு

7.ஆசமனம்:
கர்பூரோஶீர ஸுரபி4 சீதலம் விமலம் ஜலம்
3ங்கா3யாஸ்து ஸமானீதம் க்ருஹாண ஆசமனீயகம்

8.ஸ்நாநம்
மந்தா3கின்யாஸ் ஸமானீதாம் ஹேமாம்போ4ருஹ வாஸிதம்
ஸ்னானாய தே மயா ப4க்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4
ஸ்நாநம் சமர்ப்பயாமி
இங்கே அபிஷேகம் செய்யலாம். சந்தன நீர், பால், தேன், தயிர், பழ ரசங்கள், பஞ்சகவ்யம் முதலானவை
படத்தை பூஜித்தால் இவற்றை ப்ரோக்ஷணம் செய்தால் போதுமானது.

9.ஆடை அணிவித்தல்:
வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலம் ச தேவானாமபி துர்லப4ம்
க்ருஹாண த்வம் ப்ரபோ4 தேவ ப்ரஸன்னோ ப4வ ஸர்வதா3
வஸ்த்ரம் சமர்ப்பயாமி

10.பூணூல் அணிவித்தல்
யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரம்ஹணா நிர்மிதம் புரா
ஆயுஷ்யம் தே3வ வர்சஸ்யம் உபவீதம் க்3ருஹாண போ4
யக்ஞோபவீதம் சமர்ப்பயாமி

11. சந்தனம்  இடுதல்:
ஶ்ரீக2ண்ட4ம் சந்தனம் தி3வ்யம் க3ந்தா4ட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரச்ரேஷ்ட மத்34த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
கந்தாந்தாரயாமி

12. அக்‌ஷதை தூவுதல்:
அக்ஷதான் சந்த்ரவர்ணாபா4ன் ஶாலேயான் தண்டு3லான் ஶுபான்
அலங்காரார்த்த2மானீதான் தா4ரயஸ்ய மஹா ப்ரபோ4
அக்ஷதை தூவ வேன்டும்.

13. அர்ச்சனம்:
பின் வசதி போல அர்ச்சனை. ஒவ்வொரு மூர்த்திக்கும் இருக்கும் அஷ்டோத்திர ஶத (அல்லது ஸஹஸ்ர) நாமாக்களை சொல்லி அர்ச்சனை. வசதி நேரம் இல்லாதவர் அந்தந்த மூர்த்தியின் பெயரையே சொல்லி 8 முறை அர்ச்சிக்கலாம்.
14. தூபம் காட்டுதல்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

15. நெய் தீபம் காட்டுதல்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்

16. நிவேதனம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்

17. வெற்றிலை பாக்கு சமர்ப்பித்தல்:
பூகீ3 2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம் ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி

18.கர்ப்பூர ஆரதி:
 ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம்
ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர

19. மந்தர புஷ்பம் :
2லேன ப2லிதம் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம்
தஸ்மாத்ப2ல ப்ரதானேன ஸப2லாச்ச மனோரதா:
மந்தர புஷ்ப ப்ரார்த்தனை செய்யவும்.

20. ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் :
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருʼதானி ச|
தானி தானி விநஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³
என ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்க.

21. குறைபாடுகளுக்கு மன்னிப்பு வேண்டுதல்:
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஶுரேச்வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம் மயா
தாஸோயம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ புருஷோத்தம

22. உபசாரங்கள்:
சத்ரம் (குடை) தாரயாமி, சாமரம் வீஜயாமி, ந்ருத்யம் நர்தயாமி, வாத்யம் கோஷயாமி, ஆந்தோளிகாம் ஆரோஹயாமி; ஸமஸ்த பக்த்யுபசார, ராஜோபசார, சக்த்யுபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
அனேன பகவான்ஸுப்ரசன்னோ ப4வது
பகவத் ப்ரசாத சித்திரஸ்து..
என சொல்லி அக்‌ஷதை நீர் சமர்பிக்கவும்.
சுபம்