Pages

Monday, September 17, 2012

உப்பு




உப்பு பற்றி சமீபத்தில் பேச்சு எழுந்தது. உப்புக்கும் ஆன்மீக சமாசாரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. பல விஷயங்களை விசாரிக்கும் போது இது தெரிகிறது. சீரியஸாக பூஜை, ஹோமம் செய்வதானால் காலை விழித்தபின், நீரோ உணவோ ஏதுமில்லாமலே செய்யச்சொல்கிறார்கள். ஒரு வேளை அப்படி ஏதும் அருந்த வேன்டும் என்ற உடல் நிலை இருந்தால், பாலோ கஞ்சியோ குடிக்கலாம். ஆனால் அதில் உப்பு இல்லாமலே இருக்க வேண்டும். (காப்பிக்கு உப்பு போடுவதில்லைதான். ஆனால் கஞ்சி பத்தி சொல்ல வருகிறேன்!)

ஓரிரண்டு நாட்கள் செய்யணும் ஹோமங்கள் இருக்கலாம். சமீபத்தில் சஹஸ்ர சண்டி ப்ரோக்ராம்கள் சில் நடைபெற்றன. அப்படி செய்தால் அத்தனை நாளும் உப்பில்லாமலேதான் சாப்பாடு. 

காரீரேஷ்டி என்று ஒரு இஷ்டி. மழை வேண்டி செய்வது. கருப்பு அரிசி கருப்பு ஆடைகள் அணிந்து செய்வர். சுமார் 3 வாரங்கள் நடக்கும். அதில் பங்கெடுக்கும் அனைவருமே உப்பில்லாமலே அத்தனை நாட்களும் செய்ய வேண்டும். முன் ஒரு முறை இப்படி செய்துவிட்டு ,மழை பெய்யவில்லை என்று காஞ்சி பெரியவரிடம் போய் புகார் செய்தார்கள். அவர் "ஏண்டா, உப்பில்லா பத்தியம் எல்லோரும் இருந்தீங்களோ?" என்று கேட்டார். போனவர்கள் முகம் தொங்கிப்போய்விட்டது.

சித்ரா பௌர்ணமி போல சில விரதங்களும் இதே போலவே உப்பில்லா பத்தியம் அனுசரிக்க வேண்டியன.

ஆக பொதுவாகவே சீரியஸாக செய்கிற கர்மாக்களில உப்பு விலக்கப்பட்டு இருக்கு.
சாப்பாட்டிலேயே வாழை இலை போடுகிறார்களே, அதன் கீழ்- நம் பக்கம் இருக்கும் பாதியில் அன்னம் பாயசம் மாதிரி உப்பில்லாதவற்றையே பரிமாறுவார்கள். நடுவில் இருக்கும் நரம்பு அதை இரண்டா பிரிக்குதாம். மேல் பாதியில உப்புள்ளவற்றை வைக்கிறார்கள். ஏன்னு கேட்டா அன்னத்தை வயித்திலே இருக்கும் அக்னிக்கு ஹோமம் செய்வதாக சொல்கிறாங்க!

க்ளாசிகலாக வைதீகமாக செய்து வரும் ஹோமங்கள் எதிலும் உப்புள்ளவற்றை ஹோமம் செய்யச் சொல்லவில்லை.

ஆனா எங்கே தேடினாலும் ஏன்னு விளக்கம் இல்லை.

உப்பு ராஜஸ குணத்தை தூண்டுகிறது. “ஏண்டா இப்படி கொஞ்சம் கூட ரோஸம் இல்லாம இருக்கியே? உப்பு போட்டு சாப்படறயா இல்லையா?“ ன்னு கேள்வி கூட கேட்பதுண்டு.
இறையை அணுகி செய்ய வேண்டிய காரியங்களில சாத்வீகமே அதிகமாக இருக்கணும். அதனால இப்படி ராஜஸத்தை தூண்டுகிறதை விலக்கச்சொல்லி இருக்கலாம்.
விஷயம் தெரிஞ்சவங்க சொல்லலாம்.

4 comments:

Geetha Sambasivam said...

சுமார் 3 வாரங்கள் நடக்கும்.//

"3"பதிவிலே தெரியலை; ஆனால் காப்பி, பேஸ்ட் பண்ணினா வருது! :))))

நீங்க சொன்ன விஷயங்கள் நானும் சிலது கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் உப்பு சேர்த்தல் ஆசாரக் குறைவுனு நினைச்சேன். குணங்களுக்கு என்பதும் போன பதிவிலே சொன்னாப்போல் சக்தியைத் தருவது என்பதும் புதிய செய்தி. சக்தி இல்லாமல் எப்படி ஹோமம் பண்ணறது?? மற்றபடி பரிமாறும் விஷயமும் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டேன். நன்றி. மேலும் விசாரிக்கணும். இங்கே யாரானும் கிடைக்கிறாங்களானு பார்க்கலாம். நன்றி.

vasu balaji said...

கேள்வியோட கேள்வியா ஸ்ராத்தத்துல சாப்டறவாளோ பரிமாறவாளோ உப்பு வேணும்னோ/வேணுமான்னோ கேக்கப்படாதுன்னு சொல்றதும் ஏன்னு கேட்டு வச்சிக்கறேன்:)

Healthy Tips by Famous Astrologer Vighnesh said...

உப்பு கோயில்லே ஏன் குடுக்கறாங்க. திருஷ்டி சுத்தி போட ஏன் உப்பை பயன் படுத்தறாங்க. உப்பில்லாமல் சமைத்ததை 1மணிநேரம் கழித்து கெட்டு போயிடும். பல தீய சக்தியை செயலிழக்க செய்வதற்கு உப்பு தான் பிரதானம். நீங்கள் சொன்ன அணைத்தயும் யோஜித்தேன். ஒரு குண்ஸா கேள்வியை கேட்டு வைப்போமேன்னு தான்.. திவாஜி எப்படி இருக்கு..

திவாண்ணா said...

வானம்பாடிகள் கமெண்ட் இன்னைக்கு 6-10-2019 லதான் பாக்கறேன் போலிருக்கு! ச்ராத்தம்ன்னு இல்லை. பொதுவாவே சமையல்ல உப்பு சேர்க்கலாமே ஒழிய பறிமாறின பிறகு உப்பு சேர்க்கக்கூடாதுன்னு சாஸ்திரம். சிலர் இதுக்கு வொர்க் அரௌண்டா முதல்லயே இலையில உப்பு போடறாங்க!