Pages

Thursday, September 6, 2012

தினசரி பூஜை - 14



எதில வைக்கிறது? கற்களை வைத்து பூஜை செய்யும் தட்டிலே இப்ப வைக்க வேண்டாம்.அபிஷேகம் செய்யப்போகிறோம். அதனால அதுக்கு தகுந்தபடி வைக்கலாம்.
கடைகளிலே இதுக்காகவே ஒரு பக்கம் மூக்கு போல நீண்டு இருக்கும் தட்டு விற்கிறாங்க. அது இருந்தா பலவிதங்களில சுலபம். அதை வடக்கு அல்லது கிழக்குப் பக்கம் மூக்கு இருகிற மாதிரி வைத்து மூக்கு கீழே ஒரு பாத்திரமும் வைத்துவிட்டா, அபிஷேகம் செய்யச் செய்ய செய்த பொருள் பாத்திரத்தில் நிரம்பிவிடும். தட்டு, தாம்பாளத்தில் வைத்தா கடைசி வரை அதில சேருவதை எடுப்பது கஷ்டம்.


{படம் நன்றிகூகுளார். எங்கே சுட்டேன்னு மறந்து போச்சு. சம்பந்தப்பட்டவர் மன்னிக்கணும்.}

இன்னொரு விஷயம் இங்கே கவனம் இருக்கணும். சில பொருட்கள் ஒண்ணோடு ஒண்ணு சேரக்கூடாது. அந்த லிஸ்டில பாலும் தாமிரமும் சேரக்கூடாதுன்னு இருக்கு. அதனால பால் அபிஷேகம் செய்யறதா இருந்தா காப்பர் தட்டு உதவாது.

சரி, மணியடிச்சுகிட்டே பூஜை பெட்டியை திறந்து உள்ளே இருக்கிற மூர்த்தங்களை எல்லாம் எடுத்து வெளியே வைக்கிறோம். நீரால அவற்றை எல்லாம் சுத்தம் செய்து சுத்தமான மடித் துணியாலே துடைத்து முறைப்படி தட்டிலே வைக்கிறோம். நிர்மால்ய சந்தனம், குங்குமம் எல்லாம் நீக்கணும் இல்லையா? அதுக்குத்தான். குங்குமம் இடா விட்டா இந்த சந்தனத்தை சேகரித்து வாயில் போடுக்கலாம். வயித்துக்கு நல்லது.

ரைட்! முதல் படி  த்யான ஆவாஹணம், இல்லையா?

ஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒரு வேத மந்திரம் இருக்கும். அவை தெரிஞ்சு இருந்தா அதை சொல்லி ஆவாஹணம் செய்யலாம். அல்லது சிம்பிளாக சூர்யம் த்யாயாமி, ஆவாஹயாமி என்கிற ரீதியில் சொல்லிக்கொண்டு போகலாம். இதே போல கணபதிம், /கௌரிம்,/ விஷ்ணும்,/ சிவம் த்யாயாமி, ஆவாஹயாமி.

"கணானாந்த்வா" ன்னு துவங்கும் வேத மந்திரம் பிள்ளையாருக்கு.
"கௌரி மிமாய" கௌரிக்கு
"சஹஸ்ர சீர்ஷா" விஷ்ணு.
"ஆஸத்யேன" சூரியன்.
"த்ரயம்பகம் யஜாமஹே" சிவன்.

ஆவாஹணம் செய்ய மங்களாக்‌ஷதையை கொஞ்சம் ஒவ்வொரு சிலா மேலேயும் மந்திரம் சொல்லி தூவவும்.

மேலே சொன்ன எந்த வழியானாலும் பரவாயில்லை. மனசு ஊன்றணும் என்பதே முக்கியம். த்யானம் செய்து ஆவாஹணம் செய்த பின் அது கல் இல்லை. சாக்‌ஷாத் இறையே. அப்படி நம்பிக்கை வேணும்.

சரி, ஸ்வாமி எல்லாரும் வந்தாச்சு. உட்கார்த்தி வைக்க ஆசனம் கொடுப்போம். அக்‌ஷதைதான் திருப்பியும்.ஆவாஹணம் செய்தது போலவே ஸ்வாமி பெயர் சொல்லி ஆசனம் சமர்ப்பயாமி என்று அக்‌ஷதை தூவவும்.
“சத்தியமா தேவையான நேரம் இல்லை ஸ்வாமி!” ன்னு துண்டை போட்டு தாண்ட ரெடியா இருக்கிறவங்க,  தனித்தனியாக ஸ்வாமி பேரை சொல்லாமல் ஆவாஹிதாப்யோ தேவதாப்யோ நமஹ, ஆசனம் சமர்ப்பயாமின்னு சொல்லிக்கொண்டு போகலாம்.
 
இதே போல பாதயோஹோ பாத்யம் சமர்ப்பயாமி ன்னு ஒரு உத்தரணி நீரை ஸ்வாமி முன்னால் கீழே வைத்திருக்கும் தாம்பாளம் /கிண்ணம்/ டபரா எதிலாவது விடலாம். இது எதுக்குன்னா அப்புறமா தங்கமணி திட்டக்கூடாதில்லையா, அதுக்குத்தான். அத்தோட அப்புறம் வெளியே கொண்டு சேர்கிறது சுலபம்.
பிறகு ஹஸ்தயோஹோ அர்க்யம் சமர்ப்பயாமி – அதே போல.
ஆசமனீயம் சமர்ப்பயாமி- மூன்று முறை நீர் விடவும்.

 ஸ்நபயாமி என்று சொல்லி அபிஷேகத்தை ஆரம்பிக்கலாம். அபிஷேகம் செய்யம் அளவு நேரமில்லாதவர்கள் ஒவ்வொரு உத்தரணி நீரை ஒவ்வொரு மூர்த்தியின் மீதும் விட்டால் போதுமானது.
எந்த ஸ்வாமிக்கும் அபிஷேகம் செய்ய புருஷ சூக்தம் சொல்லலாம். சிவனுக்கு செய்ய ருத்திரம் சமகம் சொல்லலாம். இதே போல அந்தந்த தேவதைக்கான வேத மந்திரம் என்று தெரிந்ததை சொல்லலாம்.அப்படி மந்திரங்கள் தெரியாவிட்டால் பாதகமில்லை. அந்தந்த ஸ்வாமி பெயரையே உச்சரித்து அபிஷேகம் செய்யலாம்.
எதை எல்லாம் அபிஷேகம் செய்யலாம்?

6 comments:

Geetha Sambasivam said...

உத்தரணி நீரை ஸ்வாமி முன்னால் கீழே வைத்திருக்கும் தாம்பாளம் /கிண்ணம்/ டபரா எதிலாவது விடலாம். இது எதுக்குன்னா அப்புறமா தங்கமணி திட்டக்கூடாதில்லையா, அதுக்குத்தான்.//

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

எல் கே said...

போஸ்டை மெயிலில் பெற வழி இல்லையா

திவாண்ணா said...

கீ அக்கா! என்ன சிரிப்பு? பூஜை நேரத்தில நிம்மதியா பூஜை நடக்கிறது எவ்வளோ கஷ்டம்ன்னு செய்யறவங்களுக்கு தெரியும்!
எல்கே, கேளுங்கள் தரப்படும்.

Geetha Sambasivam said...

கீ அக்கா! என்ன சிரிப்பு? பூஜை நேரத்தில நிம்மதியா பூஜை நடக்கிறது எவ்வளோ கஷ்டம்ன்னு செய்யறவங்களுக்கு தெரியும்!//

ஹிஹிஹி, இதை இப்போத் தான் கவனிச்சேன்.

//இது எதுக்குன்னா அப்புறமா தங்கமணி திட்டக்கூடாதில்லையா, அதுக்குத்தான்.//

இதுக்குத் தான் சிரிப்பு. உம்மாச்சி பூஜை முடிஞ்சு, த.ம. பூஜை ஆரம்பிக்கும் இல்லையா? அதை நினைச்சுண்டேன். சிப்பு சிப்பா வந்தது, வருது. :))))))))

திவாண்ணா said...

//உம்மாச்சி பூஜை முடிஞ்சு, த.ம. பூஜை ஆரம்பிக்கும் இல்லையா? அதை நினைச்சுண்டேன். சிப்பு சிப்பா வந்தது, வருது. :))))))))//

பூஜை நடக்கிறப்பவே த.ம அர்ச்சனை செய்யறதுண்டு! சந்தோஷமா? :P:P:P

Geetha Sambasivam said...

பூஜை நடக்கிறப்பவே த.ம அர்ச்சனை செய்யறதுண்டு! சந்தோஷமா? :P:P:P //

அப்பாடா, கொஞ்சம் ஆறுதல், அடுத்த பதிவிலே கேட்ட கேள்விக்குப் பதில் இல்லைனதும் கோபம், வருத்தம், இதைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல். ஹிஹிஹிஹி, ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இப்போத் தான்.:P:P:P