Pages

Wednesday, October 15, 2008

நெரூர் 1



மௌலி நெரூர் பத்தி எழுதச்சொல்லி கேட்டார். நானே எப்போதாவது அதைப்பத்தி எழுத உத்தேசித்து இருந்தேன். ஆனா இப்ப அதைப்பத்தி எழுதினா என் பையர் பத்தியும் எழுதாம இருக்க முடியாது. அதனால வேண்டாம்ன்னு பாத்தேன்.

ஊருக்கு போய் இங்கே வந்து பாத்தா என் ரூமே மாறிப்போச்சு. சாதாரணமா என் ரூம் கொஞ்சம் disorder ல இருக்கிறா மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு எது எங்கே இருக்குன்னு சரியா தெரியும். என் ரூமை ஒழிக்கிறேன்னு யாராவது வந்தா அவ்வளோதான். ரொம்பவே கஷ்டப்பட்டு போயிடுவேன். இதுக்காகவே யாரையும் உள்ளே விடறதில்லை. இந்த முறை ஊர்லே 4 நாள் இல்லைன்னு என் தங்கமணி பசங்களை விட்டு ஒழிக்கச்சொல்லிட்டாங்க.
எல்லாத்தையும் மெதுவா கண்டு பிடிச்சுண்டு இருக்கேன். என் usb தம்ப் ட்ரைவ் இன்னும் காணோம். மடி கணினில இருக்கிறத இப்ப கணினிக்கு கொண்டுவர முடியலை. நெட்டுக்கு அனுப்பிதான் வாங்கணும் போல இருக்கு.

மேசையில் வைச்சு இருந்த பகவத் கீதையை காணோம். கர்ம வழியை அதை பாத்துதான் பூர்த்தி பண்ண நினைச்சு இருந்தேன்.

அதனால சரி நெரூர் பத்தியே எழுதிடலாம்ன்னு இந்த பதிவு.

பையர் பத்தாவது வரை ஸ்டார் ட்ரெக், கம்ப்யூட்டர் விளையாட்டுன்னு சாதாரணமா மத்த பசங்களை போல்தான் இருந்தார். நான் அக்னி ஆதானம் செய்து கொண்ட போது திடீர்ன்னு எல்லாம் மாறிப்போச்சு. தெய்வத்தின் குரலை நான் படிச்சு மாறினாபோல அவரும் அதை படிச்சுட்டு "ஸ்கூல் போதும். நான் வேதம் படிக்கணும்"ன்னு ஆரம்பிச்சுட்டார். "இல்லைப்பா உடனடியா இப்படி முடிவு பண்ணாதே. சாதாரணமா அப்படி படிக்கிற வயசு போயிடுத்து. ஸ்கூல் முதல்ல முடி பாக்கலாம்" ன்னு சொன்னதை ஒத்துக்கலை. ஒரு வழியா எங்க வழிகாட்டி அவனை கன்வின்ஸ் பண்ணார். "இத பார் ஸ்கூல்ல படிப்பு வரலை, வேத பாடசாலைக்கு போறான்ன்னு இருக்கப்படாது. உன் திறமையை நிரூபிச்சுட்டு அப்புறம் போ" ன்னு சொல்ல பிறகு +2 எழுதி மாநில 4 வது ரேங்க் வந்தது. ப்ரெஞ்சு மொழியானதாலே அரசு பட்டியல்லே இருக்கலை. தமிழ் பிடிக்கும் நல்லா வரும்னாலும் இன்னொரு மொழி தெரியணும் என்கிறதுக்காக அதை படிச்சான்.

அதுக்கு அப்புறமா எங்கே வேதம் படிக்கிறது? இந்த வயசிலே யார் சேத்துப்பான்னு ஆராய்ச்சி செஞ்சதிலே பங்களூர் பக்கத்திலே ஒரு உறைவிட பள்ளி அதன் 25 ஆம் வருஷத்தை கொண்டாட ஒரு பாடசாலை துவக்கி, 10, +2 மாணவர்களை சேத்துக்கொண்டு கொஞ்சம் விசாலமான சிலபஸோட வேத பாடம் சொல்லிதராங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போய் சேர்த்தோம். வருஷத்துக்கு 5 மாணவர்கள்; 10 உபநிஷத், வியாகரணம், மீமாம்ஸை போல சாஸ்திரங்கள் கொஞ்சம் பரிச்சயம் படுத்தி, சம்ஸ்க்ருதமே பேசணும்; தினசரி கொஞ்சம் உடல் உழைப்பு - இப்படி சில ஆதர்ச சமாசாரங்களோட ஒரு பள்ளிக்கூடம். மாணவர்கள் மேலே படிக்க வசதி பண்ணி இருந்தாங்க. வாரம் ஒரு நாள் +2 வோ அல்லது கரஸ். பிஏ வோ படிக்க யாராவது பாடம் எடுப்பாங்க. இப்படி ஓபன் திட்டம் இருந்ததாலே பையர் 6 வருஷ பாடங்களை 4 வருஷத்திலே முடிச்சுட்டார். அடுத்து மேலே படிக்கணும்னு மீமாம்சையை தேர்ந்து எடுத்தார். மணி திராவிட் என்று மீமாம்சை வித்வான். இப்ப அந்த சப்ஜெக்ட்லே அவர்தான் அதாரிடி. காசியிலே இருக்கார்ன்னு கேள்வி பட்டு சரி காசிக்கு போக வேண்டியதுதான் ன்னு நினைச்சு இருந்தப்ப பகவான் செயலா அவர் அந்த குளிர் ஒத்துக்கலைன்னு சென்னைக்கு வந்து சம்ஸ்க்ருத கல்லூரிலே சேந்துட்டார். அவர் கிட்டே போய் கேட்டு சேந்துண்டாச்சு. அதனால சென்னை வாசம். கல்லூரி பக்கத்திலேயே ஒரு ரூம் பாத்து கொடுத்துட்டோம். மீமாம்ஸை 2 வருஷம் வாசிச்ச பிறகு அடிப்படை எல்லாம் கத்துக்கொடுத்துட்டேன். இனி நீயே படிக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டார். முன்னாலேந்தே வியாகரணத்துல ஒரு பிடிப்பு இருந்ததாலும் அதை பங்களுர்லே எடுத்த ஆசிரியருக்கும் இவருக்கும் பரஸ்பரம் பிடித்து போனதாலும் பெங்களூர் வாசம் ஒரு வருஷத்துக்கும் மேலே. இதுக்குள்ள திருமணமும் ஆகிவிட்டதால் வியாகரணத்தை முடிக்கும் தறுவாயில் அடுத்து எங்காவது செட்டில் ஆகிவிட்டு மேலே பாக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டார். கோவை கனபாடிகள் ஒருவர் எங்கிட்டே சொல்லாம நீ எதுவும் பண்ணாதேன்னு சொல்லி இருந்தார். அவர்கிட்ட என்ன சமாசாரம்ன்னு கேட்டப்ப "ஒரு தனவந்தர் நெரூர் ப்ரம்மேந்திராள் பக்தர். அங்கே ஒரு வேத பாடசாலை வரணுன்னு அவர் ஆசை. அதுக்கு வாத்தியாரா போறியா?” ன்னு கேட்டார். இவரும் ஒப்புகிட்டார். பகவத் சங்கல்பம் வேற மாதிரி இருந்து அந்த திட்டம் சரிப்பட்டு வரலை. தனவந்தரோட ஆடிட்டர் கனபாடிகளோட திட்டத்துக்கு ஒத்துக்கலை.

அதுக்குள்ள மனசிலே நெரூர் பிடிப்பு வந்து போச்சு. நான் சும்மாவானா அங்கே போய் உக்காந்துக்கிறேன். தானா பாடசாலை வரட்டும்ன்னு கூட சொல்லிட்டார்.
போய் பாக்கலாமென்னு நெரூர் போனோம்.
அனுமார் வால் மாதிரி கதை வளந்துடுத்து. இன்னும்2 பதிவு போடணும் போல இருக்கு!

6 comments:

Geetha Sambasivam said...

//ஊருக்கு போய் இங்கே வந்து பாத்தா என் ரூமே மாறிப்போச்சு. சாதாரணமா என் ரூம் கொஞ்சம் disorder ல இருக்கிறா மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு எது எங்கே இருக்குன்னு சரியா தெரியும்//

athee, athee, ingeyum athee kathai than, கலைஞ்சு இருக்குனு பார்த்தாத் தோணும், ஆனால் நான் கரெக்டா எடுப்பேன், சொன்னாப் புரிஞ்சாத் தானே! :P:P:P:P

திவாண்ணா said...

அட, இப்ப என்ன கவலை? திருப்பி சமையலறைக்குள்ள அனுமதி கிடைக்கிறப்ப பாத்துக்கலாம்!
ஆனை நல்லா இருக்கு!

மெளலி (மதுரையம்பதி) said...

எல்லாம் அங்கேயே நீங்க வச்ச இடத்துலதாண்ணா இருக்கு.. கொஞ்சம் நல்லா (தேடிப்)பாருங்க. :)

அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவாரா பிரம்மேந்திரர்? பையருக்கு அவர் அனுக்கிரஹம் இல்லன்னா இப்படி எல்லாம் நடக்குமா?

அடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன் :)

Kavinaya said...

நீங்களே கலைச்சுட்டு அப்புறம் தேடிப் பாருங்க :)

//அடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன் :)//

நானும் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப அபூர்வமாத்தான் இந்த மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது பூர்வ ஜென்ம புண்யம்தான் வேற என்ன சொல்ல படிக்கறப்பவே சந்தோஷமா இருந்தது. மீதியையும் சீக்கிரம் எழுதிடுங்க...

திவாண்ணா said...

கவி அக்கா, நல்ல யோசனை!
கிரு அக்கா, நாளைக்கு எழுதிடறேன்
இன்னிக்கு பூரா ஒரே ஆர்காட். பூர்வ ஜனம புண்ணியமாதான் இருக்கணூம். என்னோட வாழ்கையிலும் சரி பையர் வாழகையும் சரி பல திருப்பங்கள். எல்லாம் நல்லதுக்கே!