Pages

Tuesday, October 7, 2008

கர்ம வழி பொது -7



சுலோகம் 47

கருமத்தே யுன்ற னதிகாரங் கண்டாய்
வருமப் பயனிலணு மன்னா-தொருமித்து
மற்றதனுக் கேதுவா மன்னேல் கருமமலா
வெற்றமைவில் வேண்டா விருப்பு

உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு. செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.
இதைப்பத்தி ஏற்கெனெவே பாத்தாச்சு.

சுலோகம் 48

பேறிழவி லொத்தமைத்துப் பேணு நசைதுறந்து
தேறிவரும் யோகத்துச் சேர்ந்துநீ -யாறியமைந்
தித்தகைவி லாங்கரும மேந்தியநீ யோகந்தா
னெத்த லெனவுரைப்ப ரோர்ந்து.

யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா. வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய். இதுபோன்ற மன ஒருமையே யோகமென்றழைக்கப்படுகின்றது.

வெறும் ரிசுவலா இருக்கக்கூடாது. செயல் புத்தியுடன் தாழ்ந்த பலனில நாட்டம் இல்லாமல் மோட்சம் அடைய வேண்டுமென்ற நினைப்புடன் சமாக இருந்து செய்யணும். சுவர்க்கம் போன்ற பலனில் மனம் இல்லாமல், புத்தியிலே ஆன்ம நாட்டத்தை வை. பலத்துக்கு யார் காரணமாக நினைக்கிறானோ அவன் கிருபணன் -மீண்டும் மீண்டும் பிறப்பான்.

உத்தேச தியாகம், சமர்ப்பணம் கூட கர்ம யோகமாகாது. லாப நஷ்டங்கள்ல சம மனசோட செஞ்சாதான் அது கர்ம யோகமாகும். லாபம் வந்ததா சந்தோஷம், நஷ்டம் வந்ததா சந்தோஷம், இப்படி இருக்கிற நபர் முன்னேறிடுவான்.

உலக வாழ்க்கையில கூட திடம் நிச்சயம் வேணும். வியாபாரம் செய்யறேன்னு கடைய ஆரம்பிச்ச உடனே வேற வேலைக்கு போலாமா? அப்புறம் மேலே படிக்கலாமா ....இலக்கே நிர்ணயம் இல்லை.

கர்ம யோகம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள மாறி சன்னியாசம் போகலாம்ன்னு யோசிச்சு போய், அப்புறம் மக்களுக்கு சேவை பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சு, அப்புறம் -அட இதுவும் லௌகீகம்தானே- தியானம் பண்ணு, அட! இது கஷ்டம், நாம சங்கீர்த்தனம் செய்யலாம்; இப்படி மாத்தி மாத்தி செஞ்சா?

அவரவர் குணத்தை பாத்து இதாண்டா உனக்கு, இதே செய்ன்னு ஒண்ணை கொடுத்துட்டா மனசு நிலைப்பட்டு ஒரே வழில போகும். அப்ப இதுல இருக்கிற லாபமோ நஷ்டமோ ஒரு வழி கிடைச்சுதுன்னு அதிலேயே நம்பி திடமா போய் இலக்கை அடைவான். உறுதியோட போவான்.

செய்கிற முறையிலே திடம் வேணும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன சில பதிவுகளில வெண்பாக்கள் இடம் மாறிப்போச்சு. எல்லாத்தையும் சரி செஞ்சு இருக்கேன். மன்னிக்க!


6 comments:

Kavinaya said...

//மோட்சம் அடைய வேண்டுமென்ற நினைப்புடன் சமாக இருந்து செய்யணும்.//

அந்த நினைப்பு இருந்தாக் கூட பலனை எதிர்பார்ப்பது ஆயிடுமே?

மெளலி (மதுரையம்பதி) said...

//வெறும் ரிசுவலா இருக்கக்கூடாது. //

இதை படிக்கையில் ஒரு கதையில் குரு பூனையை கட்டிப் போட்டுட்டு பாடம் நடத்தியது நினைவுக்கு வருது. தற்போது பல நேரங்களில் நாம் செய்வது ரிச்சுவலாத்தான் இருக்கு.. :(

//செயல் புத்தியுடன் தாழ்ந்த பலனில நாட்டம் இல்லாமல் மோட்சம் அடைய வேண்டுமென்ற நினைப்புடன் சமாக இருந்து செய்யணும். //

புரியுது :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

உண்மைதான்... இலக்குகள் மாறும்போது அதுக்கு நம்ம மனசு கற்பித்துக்கொல்ளும் காரணம் இருக்கே அதுதான் மிகப்பெரியா பொம்மலாட்டம்...

திவாண்ணா said...

//மோட்சம் அடைய வேண்டுமென்ற நினைப்புடன் சமாக இருந்து செய்யணும்.//

அந்த நினைப்பு இருந்தாக் கூட பலனை எதிர்பார்ப்பது ஆயிடுமே?

ஒரு வகையிலே நீங்க சொல்கிறது சரிதான்.
ஆனா நாம் எடுத்த எடுப்பிலே சமநிலைக்கு போக முடியாது இல்லையா? அதனால முதல்ல விருப்பு வெறுப்புகளை விடறத்துக்கு இப்படி செய்ய வேண்டி இருக்கு. ஆசை படுவதானால் நல்ல விஷயத்துக்கு ஆசை படுவோம். முன்னேறிய பின்னாலே "ஆசை அறுமின், ஆசை அறுமின்: ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" னு; போகலாம்.

திவாண்ணா said...

@ மௌலி,
பரவாயில்லை. அவசரத்திலே செய்த எழுத்துப்பிழையையும் தாண்டி புரிஞ்சுகிட்டீங்க!

திவாண்ணா said...

@ கிருத்திகா
பொம்மலாட்டம்... அருமையான வார்த்தை பிரயோகம்! ஆமா, வெண்பா விரும்பி நீங்கதானே? நான் கவி அக்கான்னு நினச்சுட்டேன்.